நீதிமன்றம் உத்தரவு 
செய்திகள்

மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொன்ற பெண்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வ.வைரப்பெருமாள்

மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 24 வயது பெண்ணுக்கு மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டம் மங்காவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்ரைலா கிராமத்தைச் சேர்ந்தவர் காஞ்சன் கோல் (24). இவருக்கும் இவரது மாமியார் சரோஜ் கோலுக்கும் (50) குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி அன்று இவர்களிடையே மோதல் முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த காஞ்சன் கோல், தனது மாமியாரை கத்தியால் 95 முறை குத்தி கொலை செய்தார்.

உயிரிழப்பு

சம்பவம் நடந்தபோது, சரோஜ் கோல், மற்றொரு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக அறிந்த அவரது மகன், சரேஜ் கோலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து காஞ்சன் கோலை, போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, ரேவா மாவட்டத்தின் நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கைது

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா ஜாதவ், குற்றம் சாட்டப்பட்ட காஞ்சன் கோலுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் விகாஸ் திவேதி கூறுகையில், “இந்த கொலை வழக்கில் சரோஜ் கோலின் கணவர் வால்மிக் கோல், குற்றத்தைத் தூண்டிய இணை குற்றவாளியாகக் சேர்க்கப்பட்டார். ஆனால் வழக்கு விசாரணையில் ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி?

நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் பலி!

விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்

SCROLL FOR NEXT