யாகம் 
செய்திகள்

50 எருமை, ஆடு, பன்றிகளைப் பலியிட்டு அகோரிகள் நடத்தும் மரண யாகம்... துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பகீர் தகவல்!

கவிதா குமார்

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு எதிராக கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலில் மரணத்தை விளைவிக்கும் சத்ரு பைரவி யாகத்தை அகோரிகள் நடத்துவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

எதிரிகளை அழிக்க பல யாகங்கள் நடத்தப்படுகின்றன. அப்படியொரு மரண யாகம் தான், சத்ரு பைரவி யாகம். இந்த யாகத்தில் அகோரிகள், மந்திரவாதிகள் கலந்து கொள்கின்றனர். சத்திய பைரவி என்ற சக்தியைச் சாந்தப்படுத்த இந்த யாகம் நடத்தப்படுகிறது.

யாகம்

அத்துடன் யாகத்தில் மரண, மோகனா, ஸ்தம்பனா என்ற மூன்று சோதனைகளும் நடத்தப்படுகின்றன. இந்த மூன்று பரிசோதனைகளுக்காக 21 சிவப்பு நிற ஆடுகள், 3 எருமைகள், 21 கருப்பு நிற செம்மறி ஆடுகள், 5 பன்றிகள் பலியிடப்படுகின்றன.

இந்த யாகத்தில் கர்மாக்களை அறிந்த 8 ஜோதிடர்கள் கலந்து கொள்கின்றனர். மதுபானம், இறைச்சி ஆகியவை இந்த யாகத்தில் பிரசாதமாக வழங்கப்படும். கேரளாவில் ஜோதிடர்கள் வடிவில் பல அகோரிகள் இந்த யாகத்த நிறைவேற்றுவதில் திறமையானவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கடந்த காலங்களில் பல யாகங்கள் செய்த நிகழ்வுகள் உண்டு.

டி.கே.சிவகுமார்

தற்போது தனக்கும், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக இந்த கொடூர யாகம் நடத்தப்படுவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பகீர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், " எனக்குக் கிடைத்த தகவலின்படி, எனக்கும், முதலமைச்சருக்கும் எதிராக பெரிய மாந்தீரிகம் நடக்கிறது. கேரளாவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான வெறிச்சோடிய பகுதியில் சத்ரு பைரவி யாகம் நடந்து வருகிறது. எனக்கு எதிராக சில அரசியல்வாதிகள் இப்படி செய்கிறார்கள்.

ராகுலுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார்

இப்போது யாகம் நடந்து கொண்டிருக்கிறது, அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். ஆனால், நாம் நம்பும் கடவுள் நம்மைக் காப்பார்" என்று கூறியுள்ளார்.

இந்த யாகத்தில் பங்கேற்றவர்களிடம் இருந்து டி.கே.சிவகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உஷரான டி.கே.சிவக்குமார் பாதிரியார்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஜோதிடர்களும் அவருக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். டி.கே.சிவகுமாரின் இந்த குற்றச்சாட்டு கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!

வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

SCROLL FOR NEXT