‘தக் லைஃப்’  
செய்திகள்

'தக் லைஃப்’ படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து... பிரபல நடிகருக்கு காலில் எலும்புமுறிவு!

ச.ஆனந்தப்பிரியா

கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் நடிகர் ஜோஜூ ஜார்க்கு காலில் பலத்த அடிபட்டு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.

மணி ரத்னம்- கமல் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். செர்பியாவில் சமீபத்தில் முடிந்த இதன் படப்பிடிப்பு மக்களவை தேர்தலுக்கு பின்பு மீண்டும் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது.

சென்னை, பாண்டிச்சேரி பகுதியில் நடந்து வரும் இதன் படப்பிடிப்பில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் கலந்து கொண்டிருக்கிறார். அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஹெலிக்காப்டரில் இருந்து ஜோஜூ ஜார்ஜ் குதிக்கும்படியான காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விபத்தில் சிக்கியிருக்கிறார்.

இதனால், அவரது காலில் பலத்த அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அவரை மருத்துவமனையில் படக்குழுவினர் அனுமதித்துள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு ஜோஜூ ஜார்ஜ் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜோஜூ ஜார்ஜ்

ஜோஜூ ஜார்ஜ் காலில் கட்டுடன் நடந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர். ’தக் லைஃப்’ படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஐரோப்பா பகுதிகளில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT