நடிகர் விஷால் 
செய்திகள்

விஷாலுக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கு... ஜூன்.28ல் இறுதி விசாரணை!

காமதேனு

ரூ.21 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை ஜூன் 28ஆம் தேதி தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாமல் நடிகர் விஷால் காலதாமதம் செய்ததால், அவருக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

லைகா புரொடெக்சன்ஸ்

பின்னர், இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை வழக்கு கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஷால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, லைகாவிற்கும், விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த லைகா நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் ஹேமா ஸ்ரீனிவாசன், சமரசத்திற்கு தயார் என விஷால் தரப்பு கூறினாலும், ஆக்கப்பூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இதனையடுத்து, இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூன் 28ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதனிடையே, ‘ரத்னம்’ படத்திற்காக விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவைச் சம்பளமான இரண்டு கோடியே 60 லட்சம் ரூபாயை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் செலுத்தியதை அடுத்து, அந்நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி?

நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் பலி!

விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்

SCROLL FOR NEXT