கணவர் பிரேம் சிங் தமாங் உடன் கிருஷ்ண குமாரி ராய் 
செய்திகள்

எம்எல்ஏ-வாக பதவியேற்ற மறுநாளே ராஜினாமா... சிக்கிம் முதல்வரின் மனைவி செய்கையால் குழப்பம்

எஸ்.எஸ்.லெனின்

பதவியேற்ற மறுநாளே, சிக்கிம் முதல்வரின் மனைவி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது அங்கே அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கிம் மாநில சட்டபேரவை உறுப்பினராக கிருஷ்ண குமாரி ராய் நேற்று பதவிப் பிரமாணம் மேற்கொண்டார். ஆனால் ஒரே நாளில் இன்று அவர் அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாம்ச்சி-சிங்கிதாங் தொகுதியின் எம்எல்ஏ-வாக வென்ற கிருஷ்ண குமாரி ராயின் உடனடி முடிவின் பின்னணி இன்னமும் முழுமையாக வெளிப்படவில்லை.

கிருஷ்ண குமாரி ராய்

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கின் மனைவியான கிருஷ்ண குமாரி ராய் முதல்முறையாக தேர்தலில் நின்றதோடு, கணவருக்கு அடுத்தபடியாக மாநிலத்தி வெற்றி வாய்ப்பில் முன்நின்றார். இவர்களின் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சி, அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 இடங்களையும், மாநிலத்தின் ஒரே மக்களவைத் தொகுதியையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் பெமா காண்டுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சிக்கிம் முதல்வர் தமாங் சென்றிருந்த வேளையில் இன்று இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.

கிருஷ்ண குமாரி ராய் தான் போட்டியிட்ட நாம்ச்சி-சிங்கிதாங் தொகுதியில் 5,302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 71.6 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. சோரெங்-சகுங்கில் 72.18 சதவீத வாக்குகளைப் பெற்ற முதல்வர் தமாங்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அவரது மனைவியின் வெற்றி இடம்பிடித்திருந்தது.

கணவர் பிரேம் சிங் தமாங் உடன் கிருஷ்ண குமாரி ராய்

கிருஷ்ண குமாரி ராய் முடிவிற்கான காரணங்கள் உடனடியாக தெரியவில்லை என்றாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிக்கிம் சபாநாயகர் மிங்க்மா செர்பா இன்றைய தினம் கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இந்த வகையில் விசித்திரமான காரணத்தினால், தேர்தல் முடிவடைந்த சூட்டில் சிக்கிமின் நாம்ச்சி-சிங்கிதாங் தொகுதி தற்போது காலியாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT