மாநிலத் தேர்தல் அலுவலர் சத்தியபிரதா சாகு பேட்டி
மாநிலத் தேர்தல் அலுவலர் சத்தியபிரதா சாகு பேட்டி 
செய்திகள்

ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் கட்சிக்கு சிக்கல்... மாநில தலைமை தேர்தல் அலுவலர் எச்சரிக்கை!

காமதேனு

தேர்தல் பிரச்சாரத்தின் போதோ, வீடுவீடாகச் சென்றோ வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மாநிலத் தேர்தல் அலுவலர் சத்தியபிரதா சாகு எச்சரித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுடன் மாநிலத் தேர்தல் அலுவலர் சத்தியபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் அலுவலர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப் பதிவின்போது எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது. கோவையில் பாதுகாப்பு பணியில் ஏற்கெனவே மூன்று துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு முறைகேடாக பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க, வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளில் அதிகமாக பணம் வரவு வைக்கப்பட்டாலும், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டாலும் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “தேர்தல் பிரச்சாரத்தின் போதும், வீடு வீடாகச் சென்றும் கட்சி பிரமுகர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அது குறித்து சி விஜில் செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம். அந்தப் புகார்கள் மீது 100 நிமிடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்சி மீது நடவடிக்கை பாயும்” எனவும் எச்சரித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

ரஹ்மானுக்கு இசையும் பணமும் தான் குறிக்கோள்!

மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்! வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பரிசுப்பொருட்களை விநியோகிக்கும் திமுக?! களேபரமான கரூர்!

அட்டைப் படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த சமந்தா...ஃபயர் விடும் ரசிகர்கள்!

போர்க்களமான புதுச்சேரி... ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சி... தள்ளு முள்ளுவால் பரபரப்பு!

SCROLL FOR NEXT