செய்திகள்

பறவைக் காய்ச்சலால் ஒருவர் மரணம்... இந்தியாவில் 4 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

கவிதா குமார்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் 4 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கொரோனாவை விட ஆபத்தானது என்று கூறப்படும் பறவைக்காய்ச்சல் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்திய ஒரு அறிக்கையின்படி, அமெரிக்க நகரங்களில் பால் மூலம் பசுவிலிருந்து மனிதனுக்கு நோய் பரவுவதாக தகவல் வெளியானது. இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவும் எச்5என்1 வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக எச்சரித்திருந்தது. எச்5என்1 வைரஸ் பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் ஆந்திராவில் நெல்லூர் மாவட்டம், மகாராஷ்டிராவில் நாக்பூர் மாவட்டம், ஜார்கண்ட்டில் ராஞ்சி மாவட்டம் மற்றும் கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பத்தனந்திட்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகள் அடங்கிய நான்கு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம்

பறவைக் காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 59 வயது நபர் நேற்று உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், அந்த நபர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதை ஐ.நா நிறுவனம் தெரிவிக்கவில்லை. உயிரிழந்தவர் காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் ஏப்ரல் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நீண்டகால சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்கெனவே இருந்தன. இந்த குறிப்பிட்ட நோய்த்தொற்றின் ஆதாரம் தெளிவாக இல்லை என்றாலும், மெக்சிகோவில் கோழிகளில் எச்5என்1 வைரஸ்கள் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது. மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம், நபருக்கு நபர் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

SCROLL FOR NEXT