கோப்புப்படம்
கோப்புப்படம்  
செய்திகள்

முற்றிய வாய்ச்சண்டை... மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை!

காமதேனு

தென்காசி அருகே, குடும்பத் தகராறில் மனைவியை உலக்கையால் கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார் ஒரு கணவர். மனைவியை அடுத்துக் கொன்றுவிட்டு பயத்தில் தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் தெற்கு பாரப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (70). இவரது மனைவி சீதை (65). வயதானாலும் இவர்களுக்கு இடையில் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாகவே இருந்திருக்கிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 11:30 மணியளவில் கணவன் மனைவிக்கு இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி இருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி , வீட்டில் இருந்த உலக்கையால் தனது மனைவி சீதை தலையிலும், வாயிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சீதை, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை நடந்த வீடு

மனைவியை அடித்துக்க் கொன்ற கருப்பசாமி அச்சத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் போலீஸார், சீதையின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியை கணவரே உலக்கையால் அடித்துக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

SCROLL FOR NEXT