பெண்ணுக்கு பிரசவம் பார்த்த செவியர்கள் 
தேசம்

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி... சாலையில் பிரசவம் பார்த்து காப்பாற்றிய செவிலியர்கள்...!

காமதேனு

நொய்டாவில் சாலையோரம் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த கர்ப்பிணிக்கு 2 செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில், அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளது. இவர்களின் சேவையை பாராட்டிய மருத்துவமனை நிர்வாகம் இரண்டு செவிலியர்களுக்கும் தலா ரூ.51,000 வெகுமதியாக அளித்துள்ளது. இந்த செவிலியர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் தனது கணவருடன் ரோஷினி எனும் கர்ப்பிணி நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடித்தார். சாலையில் ரோஷினியை படுக்க வைத்துவிட்டு, அவரது கணவர் பிரசாந்த் சர்மா பொதுமக்களிடம் உதவிக்கேட்டு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அங்கு வந்த தேவி மற்றும் ஜோதி எனும் செவிலியர்கள் உதவிக்கு வந்துள்ளனர். பிரச்சினையின் வீரியத்தை புரிந்துக் கொண்ட அவர்கள், அங்கேயே பிரசவம் பார்க்க முடிவெடுத்தனர். இதற்கு அந்த வழியாக வந்த சில பெண்களும் உதவி செய்தனர்.

கோப்புப்படம்

சாலையில் தற்காலிக பிரசவ ஏற்பாட்டை செய்து, ரோஷினிக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, ஆட்டோவை வரவழைத்து தாய் ரோஷினியையும், குழந்தையையும் தாங்கள் வேலைப்பார்க்கும் சாரதா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தாயும், குழந்தையும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தக்க சமயத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால், தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சாலையில் பிரசவம் பார்த்து தாய், குழந்தையை காப்பாற்றிய செவிலியர்கள தேவி, ஜோதி ஆகியோரின் மருத்துவ சேவையை பாராட்டி, சாரதா மருத்துவமனை நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது. மேலும், இருவருக்கும் தலா ரூ.51 ஆயிரம் ரூபாயை வெகுமதியாக அளித்தது. தற்போது இரண்டு செவிலியர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

திமுக - மநீம தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தாக வாய்ப்பு!

குட்நியூஸ்... தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: நாளை தொடங்குகிறது!

அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு...16 கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கூச்சமே இல்லாமல் எப்படி வருகிறீர்கள்?: பிரதமர் மோடி மீது சாட்டை சொடுக்கிய திமுக!

SCROLL FOR NEXT