கொலை செய்யப்பட்ட  ஹூப்ளி கல்லூரி  மாணவி நேஹா
கொலை செய்யப்பட்ட ஹூப்ளி கல்லூரி மாணவி நேஹா  
தேசம்

கர்நாடகா சிறையில் உள்ள கொலையாளியின் செல்போன் படம் எப்படி வெளியானது?... மத்திய அமைச்சர் கேள்வி!

காமதேனு

ஹூப்ளி கல்லூரி மாணவி நேஹா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஃபயாஸின் செல்போன் புகைப்படம் எப்படி வெளியானது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சன் ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். அவரை ஃபயாஸ் என்ற மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலை நேஹா ஏற்கவில்லை.

கொலை செய்யப்பட்ட நேஹா அவரது தந்தையுடன்.

இதனால் கல்லூரி வளாகத்தில் வைத்து ஏப்.18-ம் தேதி நேஹாவை ஃபயாஸ் கத்திக் குத்திக்கொலை செய்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேஹா கொலையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஃபயாஸ்க்கு நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேஹாவை கொலை செய்த ஃபயாஸ் சிறையில் இருக்கும் போது செல்போன் புகைப்படம் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

சிறையில் உள்ள குற்றவாளிகளின் செல்போன் புகைப்படம் எப்படி வெளியாகும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஃபயாஸ்

எனவே, நேஹா குடும்பத்தினரின் கோரிக்கையின்படி விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதே கோரிக்கையை கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை நிரஞ்சனும் வலியுறுத்தியுள்ளனர்.

நேஹா கொலை வழக்கை சிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ஏற்கெனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT