டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் 
தேசம்

டெல்லியில் மரங்கள், செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

காமதேனு

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் இன்று செல்போன் கோபுரம், மரங்களில் ஏறி போராட்டம் நடத்தினர்.

நதிகள் இணைப்பு, விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அய்யகண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சுமார் 200 விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள், அரசு மற்றும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏர் கலப்பைகள், எலிகள், மண்டை ஓடுகளுடன் அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக நேற்று ஜந்தர் மந்தர் நோக்கி சென்ற அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகளை, துணை ராணுவப் படையினர் தடுத்து, கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக விவசாயிகள் இரண்டாவது இன்று, அங்குள்ள மரங்கள் மற்றும் செல்போன் கோபுரங்களில் ஏறி, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மரத்தில் ஏறிய பெண் விவசாயிகளை கீழே இறங்கி வருமாறு போலீஸார் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கயிறுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினர்.

இதையடுத்து டெல்லி போலீஸாரும், தீயணைப்பு துறை வீரர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், விவசாயிகள் கீழே இறங்க மறுத்ததால், பெண் போலீஸார் மரத்தில் ஏறி, அந்த பெண் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கீழே இறங்க செய்தனர். இதேபோல், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளையும் கீழே இறக்கும் முயற்சியில் டெல்லி போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழக பெண் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

SCROLL FOR NEXT