ரயில் பயணிகள்
ரயில் பயணிகள் 
தேசம்

குட்நியூஸ்... 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம்!

காமதேனு

கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில்களின் கட்டணம் நான்கு ஆண்டுகளுக்கு பின் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையம்

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது அனைத்து வகை போக்குவரத்தும் முடக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இந்த சிறப்பு ரயில்களில் சாதாரணக் கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், பின்னர் படிப்படியாக பொது முடக்கத் தளர்வுகள் அமலான பிறகு குறுகிய தூர ரயில்களும் இயக்கப்பட்டன. ஆனால் அனைத்து ரயில்களையும் சிறப்பு ரயில்கள் என்ற அடிப்படையிலேயே ரயில்வே துறை இயக்கியது. இதனால் ரயில் கட்டணம் அதிகமாக இருந்தது.

ரயில் பயணி

இதுகுறித்து புகார்கள்  வந்ததையடுத்து சிறப்பு ரயில் நடைமுறை கைவிடப்பட்டது.   இருப்பினும் சில சாதாரண ரயில்கள் விரைவு ரயில்களாகவும், விரைவு ரயில்கள் சிறப்பு ரயில்களாகவும், விடுமுறை கால சிறப்பு ரயில்களாகவும் இயக்கப்படுகின்றன.  அவற்றுள் குறைந்தபட்ச கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது.  

இந்நிலையில், கடந்தாண்டு கொரோனாவுக்கு முந்தைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்தும்,  கட்டணத்தைக் குறைக்கவில்லை. இதனால், நடுத்தர மக்களும், வேலைக்குச் செல்லும் பணியாளர்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சிறப்பு விரைவு ரயில்கள் என்று பெயர் மாற்றி அறிவிக்கப்பட்ட ரயில்களில் மீண்டும் பழைய கட்டணமே வசூல் செய்யப்பட உள்ளது. 200 கி.மீ.க்கும் குறைவான தொலைவு செல்லும் ரயில்களில் பழைய கட்டணமே வசூலிக்க தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  


பிரதமர் மோடி வருகை... தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!

கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த ஏ.ஆர்.ரஹ்மான்... சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு!

திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி...செல்வப்பெருந்தகை டெல்லி பயணம்!

தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட்நியூஸ்... தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு!

தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் கொலையில் திடீர் திருப்பம்...பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்குத் தொடர்பு!

SCROLL FOR NEXT