தேசம்

தீபாவளி ஜாக்பாட்... பி.எஃப் சந்தாதாரர்களுக்கு வட்டியை வரவு வைக்கும் செயல்முறை தொடங்கியது!

காமதேனு

பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளி நேரத்தில் சிறப்பு செய்தி வந்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் அறிவித்தபடி, வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் வட்டி வரவு வைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

அலுவலக பணிகளில் பணிபுரியும் அனைவரிடமும் பெரும்பாலும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் பிஎஃப் கணக்கு இருக்கும். இதில் ஊழியர்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துகிறார்கள். ஊழியர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் பணிபுரியும் நிறுவனமும் அவர்களது கணக்கில் அதே அளவு தொகையை செலுத்துகிறது. எனினும், நிறுவனம் செலுத்தும் தொகையில் ஒரு பகுதி இபிஎஃப் -க்கும் ஒரு பகுதி இபிஎஸ் -க்கும் செல்கிறது. பொதுவாக இபிஎஃப் -இல் டெபாசிட் செய்யப்படும் பணம் பணி ஓய்வு காலத்தை கருத்தில்கொண்டே சேமிக்கப்படுகின்றது. எனினும், அதற்கு முன்னரும் அவசர தேவைகளோ, அத்தியாவசிய தேவைகளோ ஏற்பட்டால், இந்த தொகை நமக்கு கை கொடுக்கிறது.

EPFO

பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சமீபத்தில் அறிவித்தபடி, வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் வட்டி வரவு வைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இபிஎஃப்ஓ ஏற்கனவே 24 கோடிக்கும் அதிகமான கணக்குகளில் வட்டித்தொகயை வரவு வைத்துபிட்டது என சமீபத்தில் கூறியிருந்தார். 2022-23 நிதியாண்டில், இபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உள்ளது.

பிஎஃப்

இபிஎஃப் கணக்குகளில் வட்டி வரவு வைப்பதற்கான காலக்கெடு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, "செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது. வட்டித்தொகை பற்றிய விவரம் விரைவில் கணக்குகளில் பிரதிபலிக்கும். வட்டி வரவு வைக்கப்பட்டவுடன், அது சேர்க்கப்பட்டு முழுமையாக செலுத்தப்படும், ஆகையால் வட்டி இழப்பு ஏற்படாது. தயவு செய்து பொறுமையாக இருங்கள்" என இபிஎஃப்ஓ தெளிவுபடுத்தியது.

எஸ்.எம்.எஸ்., மிஸ்டு கால், UMANG செயலி மற்றும் EPFO இணையதளம் வாயிலாக வருங்கால வைப்பு நிதி கணக்கு இருப்பை சரிபார்க்கலாம்.

SCROLL FOR NEXT