மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 
தேசம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்... வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த வனத்துறை ஊழியர் சஸ்பெண்ட்!

காமதேனு

மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் தெரிவித்து, வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்த வனத்துறை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்

மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தில் பாந்தரகவ்டாவில் வனத்துறையில் பணிபுரிந்து வருபவர் சிவசங்கர் மோரே. இவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பும் வகையில் தனது வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்துள்ளார். இதுகுறித்து சந்திரபூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட அர்னி உதவி தேர்தல் அதிகாரிக்கு புகார் சென்றது.

இவிஎம்-களின் செயல்திறன் குறித்து சந்தேகத்தை எழுப்பியது, மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது மற்றும் அரசு ஊழியராக இருந்து கொண்டு இச்செயலில் ஈடுபட்டது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.

சஸ்பெண்ட்

எனவே சிவசங்கர் மோரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாந்தரகவ்டா கோட்ட வன அலுவலர் மற்றும் சந்திரபூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வினய் கவுடா ஆகியோருக்கு அர்னி உதவி தேர்தல் அதிகாரி கடிதம் எழுதினார். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் சிவசங்கர் மோரேவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அதிகாரி வினய் கவுடா உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சிவசங்கர் மோரே மீது இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ல் தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்பி வாட்ஸ் ஸ்டேட்ஸ் வைத்ததற்காக வனத்துறை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

SCROLL FOR NEXT