டெல்லி உயர்நீதிமன்றம் 
தேசம்

பறிமுதல் செய்ததில் ரூ.5 லட்சம் கோடி மதிப்புடைய 70,772 கிலோ ஹெராயின் காணவில்லை; மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

காமதேனு

கடந்த 2018 முதல் 2020 வரை பறிமுதல் செய்யப்பட்ட 70,772.48 கிலோ ஹெராயின் (ரூ.5 லட்சம் கோடி மதிப்புடையது) காணாமல் போனது, மத்திய அரசு பதிலளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 முதல் 2020 வரை பறிமுதல் செய்யப்பட்ட 70,772.48 கிலோ ஹெராயின் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் பி.ஆர்.அரவிந்தக்ஷன் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) அறிக்கைகளுக்கும், 2018 முதல் 2020 வரை நாட்டில் போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) வெளியிட்ட தரவுகளுக்கும் இடையே பெரும் முரண்பாடு உள்ளது.

போதைப் பொருள்

சர்வதேச சந்தையில் சுமார் ரூ. 5 லட்சம் கோடி மதிப்புள்ள 70,000 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெராயின் காணாமல் போனது தேசிய பாதுகாப்பு, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்த கவலைகளை எழுப்புகிறது. முரண்பாட்டின் அளவு மிகவும் பெரியது. இது உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக கடந்த 12.9.2022 அன்று உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயிடம் புகாரும் அளிக்கப்பட்டது. இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,772.54 கிலோ ஹெராயின் காணாமல் போயுள்ளது என்று மனுதாரர் வலியுறுத்தினார், இதனால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் உள் துறை அமைச்சகத்தில் வலியுறுத்தப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம்

எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுதாரர் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் முன்பு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, “2018 முதல் 2020 வரை பறிமுதல் செய்யப்பட்ட பதிவுகளிலிருந்து மொத்தம் 70,772.48 கிலோ ஹெராயின் காணாமல் போயுள்ளது என அவர் (மனுதாரர்) கூறுகிறார்.

இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில்களை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை வரும் செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 200 பாகிஸ்தான் யாத்ரீகர்கள்... வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நயன்தாரா, சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கும் சினேகன் மனைவி; கலாய்க்கும் ரசிகர்கள்!

“நியாயமா ஆண்டவரே...”  கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!

“பயந்து ஓடாதீங்க...” ரேபரேலி விவகாரத்தில் ராகுலை சீண்டிய பிரதமர் மோடி!

செல்போன் லைட்டில் அறுவை சிகிச்சை... தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!

SCROLL FOR NEXT