முகநூலில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்கள்.
முகநூலில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்கள். 
தேசம்

'பாஜக வேட்பாளர் ஒரு போக்கிரி'... மத்திய அமைச்சர் குறித்து முகநூலில் வெளியிடப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

காமதேனு

மத்திய அமைச்சரும், பீதர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான பகவந்த் கூபா குறித்து 'வான்டட்', 'போக்கிரி' என்ற வார்த்தைகளுடன் முகநூலில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ இறப்பால் காலியாக உள்ள சுர்பூர் சட்டசபை தொகுதிக்கு மே 7-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா

கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தல் வெற்றியைப் பறிக்க வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக நடிகர், நடிகைகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாஜகவைச் சேர்ந்த பலர் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து பாஜக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. பாஜகவிற்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஈஸ்வரப்பா களமிறங்கியுள்ளது அக்கட்சிக்கு தலைவலியை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சரும், பீதர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான பகவந்த் கூபா குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்கள், கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பகவந்த் கூபா

'வைரல் எண்ணங்கள்' என்ற பெயரில் முகநூலில் பகவந்த் கூபாவை பற்றி 'வான்டட்', 'போக்கரி' போன்ற தகாத வார்த்தைகளில் அந்த பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அமைச்சராக இருந்தும் பகவந்த் கூபா முறைகேடாக நடந்து கொண்டதாகவும், அவர் தொகுதிக்கு எந்த பணியும் செய்யவில்லை என்று அந்த போஸ்டர்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த பதிவுகளை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த பதிவுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் பாஜக புகார் செய்துள்ளது. மத்திய அமைச்சரை கேலி செய்து முகநூலில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்கள் கர்நாடகாவில் வைரலாகி வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

SCROLL FOR NEXT