இந்தியா - இலங்கை
இந்தியா - இலங்கை 
சர்வதேசம்

இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை... இந்தியா உட்பட 7 நாடுகளுக்கு தாராளம்!

காமதேனு

இந்தியா உட்பட 7 நாடுகளின் மக்கள், இலங்கை செல்வதற்கு இனி விசா தேவையில்லை என இலங்கை அமைச்சரகம் புதிய அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது.

இந்தியா மட்டுமன்றி, இந்தோனேஷியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா மற்றும் தாய்லாந்து என 7 தேசங்களுக்கு இலங்கை தற்போது தாராளம் காட்டியுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்துக்கு காலக்கெடுவும் விதித்து, புதிய அறிவிப்பினை இலங்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் இயற்கை

இலங்கையின் இனப்போராட்டம் ஒருவகையில் முடிவுக்கு வந்தபோதும், ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாக விரைவில் அதன் பொருளாதாரம் நொடித்தது. பொங்கியெழுந்த மக்கள் போராட்டம் காரணமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் நாட்டைவிட்டே ஓடும் நிலைமைக்கு ஆளானார்கள்.

திவால் நிலையை நோக்கி சென்ற இலங்கையின் பொருளாதாரம் இந்தியா, சீனா உள்ளிட்ட பிராந்திய வல்லாதிக்க நாடுகளின் உதவியால் மீள ஆரம்பித்தது. ஆனபோதும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது தவித்து வருகிறது. இந்த நிலையில், இலங்கைக்கு பிரதான வருவாய் அளிக்கும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த, அந்த நாடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விசா நடைமுறை

அவற்றில் ஒன்றாக ஆசியாவின் 7 நாடுகளுக்கு விசா இன்றி இலங்கையில் பிரவேசிப்பதற்கான அங்கீகாரத்தை அறிவித்துள்ளது. முன்னோடித் திட்டமாக 2024 மார்ச் இறுதிவரையிலான காலக்கெடுவுடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனினும் தேவைக்கு ஏற்ப விசா அங்கீகாரத்தை மேலும் நீட்டிக்கவும் இலங்கை ஆயத்தமாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

SCROLL FOR NEXT