ஜோசப் டேவிட் எமர்சன் 
சர்வதேசம்

நடுவானில் அதிர்ச்சி... விமானத்தில் பைலட் செய்த காரியத்தால் பதறிய பயணிகள்!

காமதேனு

அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் இன்ஜினை ஆஃப் செய்ய முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அலாஸ்கா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஹாரிஜான் ஏர்ஜெட் விமானம் அமெரிக்காவில் வாஷிங்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது, ஜோசப் டேவிட் எமர்சன் என்ற 44 வயது நபர் திடீரென விமானம் தீ பிடித்தால் அவசர காலத்தில் இன்ஜினை ஆஃப் செய்யும், கருவியை இயக்கினார். இதனை திறம்பட கையாண்ட பணியில் இருந்த விமானிகள் இன்ஜின் ஆஃப் ஆகாமல் பார்த்துக்கொண்டனர்.

ஜோசப் டேவிட் எமர்சன்

இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அலறியடித்தனர். இதையடுத்து, விமான பணியாளர்கள் உடனடியாக எமர்சனை பிடித்து தனியாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானம் அருகே இருந்த போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார் ஜோசப் டேவிட்டை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அலஸ்கா விமான நிறுவனத்தில் பைலட்டாக பணி புரிந்தவர் என்றும் அவர் வேலை பறிக்கப்பட்ட நிலையில், விரக்தியில் இருந்த அவர் இந்த செயலில் ஈடுபட்டதும் அம்பலமானது.

டேவிட் மீது 83 பேரை கொல்லை முயன்றது, விமானத்தை விபத்துக்குள்ளாக்க சதி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதோடு, சில மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் மற்ற பயணிகளுடன் சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தது.

SCROLL FOR NEXT