இந்திய பிரதமர் மோடி உடன் முகமது மொய்சு 
சர்வதேசம்

‘நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால்...’ கொந்தளிக்கும் மாலத்தீவு அதிபர்

காமதேனு

சகல வகைகளிலும் சீனாவின் ஆதரவு கிடைத்ததில், இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திருவாய் மலர்ந்து வருகிறார்.

முகமது முய்சு தலைமையிலான புதிய ஆட்சி நிர்வாகம் மாலத்தீவுகளில் பொறுப்பேற்றது முதலே, இந்தியாவுடனான அதன் விலக்கம் வெளிப்படையானது. இந்தியாவுக்கு பதிலாக பிராந்திய வல்லரசான சீனாவின் பக்கம் மாலத்தீவு முற்றிலுமாக சாய்ந்திருக்கிறது.

லட்சத்தீவு கடற்கரையில் பிரதமர் மோடி

இதற்கிடையே, பிரதமர் மோடி லட்சத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டதும், அங்கத்திய போட்டோ ஷூட் வைரலானதும் மாலத்தீவினரை வெகுவாய் சீண்டியது. மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவுகளை ஆதரிக்கும் இந்தியாவின் பிரதமரை இழிவு செய்யும் வகையில் மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்துப் பதிவிட்டனர்.

உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அப்போதைக்கு விவகாரத்தை தணியச் செய்தது மாலத்தீவு. எனினும் சீனா ஆதரவு நிலைப்பாட்டுக்காக, இந்தியாவுடனான பிணக்கை மாலத்தீவு தொடர்ந்தது.

இதற்கிடையே சீனா சென்ற உத்வேகத்தில் மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, இந்தியாவை கடுமையாக தாக்கி உள்ளார். அவற்றில் ஒரு அஸ்திரமாக, தாங்கள் அளவில் சிறிய நாடு என்பதை அவர் முன்னிறுத்தி வருகிறார். “நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால் அது எங்களை சிறுமைப்படுத்தும் உரிமத்தை வழங்கியது ஆகாது” என்று காட்டம் காட்டியிருக்கிறார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் முகமது மொய்சு

அண்மையில் சீனா சென்ற முகமது மொய்சு, ’மாலத்தீவுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்புமாறு’ கேட்டிருக்கிறார். மேலும் மாலத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்துவது உட்பட சுமார் 20 ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

சீனாவும் ’மாலத்தீவின் தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் கண்ணியம், மரியாதை ஆகியவற்றை நிலைநிறுத்துவதாக’ அறிவித்துள்ளது. ’மாலத்தீவுகளின் தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையை ஆராய்வது மற்றும் மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிப்புற தலையீட்டை உறுதியாக எதிர்ப்பது’ என்று மாலத்தீவுக்கான தங்கள் ஆதரவை வெளிப்படையாக சீனா தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தேமுதிகவை வளைத்ததா பாஜக? திமுகவைக் கண்டித்து தேமுதிக திடீர் போராட்டம் அறிவிப்பு!

50 வருஷத்துக்கு சார்ஜர் தேவையில்லை; சந்தைக்கு வருகிறது சீனாவின் லேட்டஸ்ட் பேட்டரி!

30 நிமிடங்களில் வலியில்லாமல் சாகலாம்...வந்தாச்சு 'மிஸ்டர் டெத்' இயந்திரம்!

கத்தியைக் காட்டி திமுக மேயருக்கு கொலைமிரட்டல்... காங்கிரஸ் கவுன்சிலர் தலைமறைவு!

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு... உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

SCROLL FOR NEXT