காரில் நடனமாடும் இளம்பெண்
காரில் நடனமாடும் இளம்பெண் 
சர்வதேசம்

இதுக்கெல்லாம் ஒரு அளவே இல்லையா?.... ரீல்ஸ் எடுக்க 8 கோடி ரூபாய் காரை உடைத்த இளம்பெண்!

காமதேனு

ரூ.8.89 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரில் ஏறி ஆடி கண்ணாடியை உடைத்த பெண்ணின் ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன் கடும் கண்டனங்களையும் பெற்று வருகிறது.

சமீபகாலமாக எதைச் செய்தாலும் அதை சமூக வலைதளங்களில் வெளியிட விரும்புபவர்கள் அதிகம். உணவு சாப்பிடும் கடை தொடங்கி உடை உடுத்தும் ஆடையகம் வரை எல்லாவற்றையும் தங்களது செல்போன் மூலம் நேரலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதிக லைக், கமெண்டுகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். இப்படி ஒருவர் செய்த காரியம் தான், உலகம் முழுவதும் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், ஒரு இளம்பெண் ஒருவர் லைக்ஸ் அள்ள ரீல்ஸ்க்காக ஒரு காரின் மீது பாய்ந்து ஆடியுள்ளார். இதில் அந்த காரின் கண்ணாடி தெறித்து விட்டது. இந்த வீடியோ தான் உலகம் முழுவதும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காரில் நடனமாடும் இளம்பெண்

அந்த வீடியோவில், இளஞ்சிவப்பு நிற டியூப் டாப் மற்றும் வெள்ளை நிற குட்டைப் பாவாடை அணிந்த இளம்பெண் ஒருவர், நீல நிற லம்போர்கினி காரின் மேல் நடனமாடுகிறார். இந்த கார் குறைந்தது 3.22 கோடியில் தொடங்கி 8.89 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இவ்வளவு விலை உயர்ந்த காரில் ஏறி அவர் குதித்ததால், அவரின் பாரம் தாளாமல் காரின் கண்ணாடி உடைந்து விரிசல் ஏற்பட்டது. இதைப் பார்த்த பிறகும் அந்த பெண் நடனமாடுவதை நிறுத்தவில்லை. இந்த வீடியோவை ரெடிட் வெளியிட்டது, இந்த சம்பவம் நடந்த இடம் மற்றும் தேதி தெரியவில்லை.

இந்த வீடியோ தற்போது ஏராளமான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ரூ.8.89 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரில் ஏறி ஆடி கண்ணாடியை உடைத்த அந்த இளம்பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு விலை உயர்ந்த கார் என்றால், அதை நான் தொடவே மாட்டேன். ஆனால், இந்த பெண் கண்ணாடியை உடைத்து விட்டாளே என்பது போன்ற கமெண்டுகள் எழுந்தாலும், இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிகின்றன.

கடந்த காலத்திலும் @snowbunnyjelly என்று அடையாளம் காணப்பட்ட இந்த இளம்பெண், கார்கள் மீது சேறுகளை வீசுவது, அவற்றின் கூரைகளில் குதிப்பது போன்ற பல வீடியோக்களை ஏற்கெனவே எடுத்து பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT