லாரி மோதியதில் சேதமடைந்த ரயில்வே கேட்
லாரி மோதியதில் சேதமடைந்த ரயில்வே கேட் 
க்ரைம்

ரயில்வே கேட் டமால்... ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதம்!

காமதேனு

செங்கல்பட்டு அருகே லாரி மோதி ரயில்வே கேட் உடைந்ததால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் ஒரகடம் சாலை இணைப்பில் ரயில்வே கேட் உள்ளது. இன்று காலை விழுப்புரத்தில் இருந்து இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டிற்கு கார் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ரயில்வே கேட் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் ரயில்வே கேட் முற்றிலுமாக சேதமடைந்து பாதையில் விழுந்தது.

நிறுத்தப்பட்ட ரயில்கள்

இதனால் ரயில்வே சிக்னல் சரிவர வேலை செய்யாததால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயிலில் காத்திருந்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஆபத்தான முறையில் பேருந்தில் ஏறி செல்வதற்காக தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்

இதன் காரணமாக, உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். லாரி மோதியதில் சேதமடைந்த ரயில்வே கேட்டை சீர் செய்யும் பணியில் ரயில்வே துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ரயில்வே கேட் உடைந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அந்த மார்க்கத்தில் இரண்டு மணி நேரம் காலதாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா, 11.5 கோடி ரூபாய், 120 கோடி ஆவணங்கள் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

எல்லா இந்தியர்களும் மோசமானவர்கள் அல்ல... பலாத்காரத்திற்குள்ளான ஸ்பெயின் பெண் பேட்டி !

ராகுல் யாத்திரையில் ஆம் ஆத்மி... குஜராத் பொதுக்கூட்டத்தில் கேஜ்ரிவால் இணைந்து கலக்க முடிவு!

நக்சல் தம்பதி கைது... பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கை!

பாடகருக்குப் பதில் களமிறங்கும் நடிகை... பாஜக போடும் பக்கா பிளான்!

SCROLL FOR NEXT