குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் என்ஐஏ அதிகாரிகள்.
குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் என்ஐஏ அதிகாரிகள். 
க்ரைம்

பெங்களூரு ஐ.டி பார்க் பகுதியில் குண்டு வைப்பது தான் அவர்களின் முதல் ஸ்கெட்ச்...என்ஐஏ அதிர்ச்சி தகவல்!

காமதேனு

பெங்களூருவில் உள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவன பகுதியில் தான் குற்றவாளிகள், வெடிகுண்டு தாக்குதல் நடத்த முதலில் திட்டமிடப்பட்டதாக என்ஐஏவின் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி பட்டப்பகலில் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ தொடர் விசாரணை நடத்தியது. இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளான அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஆகியோர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ராமேஸ்வரம் கஃபே குணடு வெடிப்பு

பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு குற்றவாளிகள் இருவரும் மாநிலத்திலிருந்து தப்பி தமிழகம் மற்றும் ஒடிசாவை சுற்றி விட்டு மேற்கு வங்காளம் சேர்ந்தனர். அவர்களை கொல்கத்தாவில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிகள்

ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் குண்டு வைப்பது அவர்கள் இலக்காக இல்லை. பெங்களூருவுக்கு சர்வதேச அளவில் புகழ் தேடித்தந்த ஐ.டி பார்க் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்ததான், குற்றவாளிகள் முதலில் ஸ்கெட்ச் போட்டுள்ளனர். அதற்குக் காரணம் பன்னாட்டு தகவல் தொழில் நிறுவனங்கள் உள்ள பகுதியில் வெடிகுண்டு வெடித்தால், அது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் பெரும் செய்தியாக மாறும் என்று திட்டமிட்டுள்ளனர்.

பெங்களூருவில் சிறப்புப் பொருளாதார மண்டலம்( SEZ) பகுதியில் பெரிய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ITBT) உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகின்றனர். இங்கு வெடிகுண்டு வெடித்தால், தங்கள் செயல் சர்வதேச அளவில் பெரிய செய்தியாக மாறும் என்ற நம்பிக்கையில் குற்றவாளிகள் ஒயிட்ஃபீல்டில் சுற்றித் திரிந்தனர் என்று என்ஐஏ விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

ஒயிட்ஃபீல்டில் பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனங்கள்

ஆனால், பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ITBT) உள்ள பகுதியில் வெடிகுண்டு வைப்பது அவ்வளவு எளிதல்ல என்று அவர்கள் உறுதியாக நம்பினர். அதற்குக் காரணம் அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் கடுமையான பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் இருந்தன. அத்துடன் அந்த நிறுவன வளாகங்களுக்குள் செல்வது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை அறிந்து தான் தங்கள் திட்டத்தை மாற்றி அதே பகுதியில் குண்டுவெடிப்பை நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனங்கள்

இதன்பின் ஒயிட்ஃபீல்டில் ராமேஸ்வரம் கஃபேவைக் கண்டுபிடித்தார். அந்த ஓட்டலில் நிறைய பேர் வருகிறார்கள். அத்துடன் நிறைய ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர்களும் அங்கு வருகிறார்கள். அந்த ஓட்டலில் நுழைவதற்கு எந்த தடையும் இருக்காது. எனவே, குண்டுவெடிப்பு நடத்த ஏற்ற இடமாக ராமேஸ்வரம் கஃபே அவர்களால் தேர்வு செய்யப்பட்டது என்று விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவலால் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

SCROLL FOR NEXT