நிர்மலா தேவி  
க்ரைம்

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு... நிர்மலாதேவி குற்றவாளி என அறிவிப்பு... இருவர் விடுதலை!

காமதேனு

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவியை குற்றவாளி எனவும், உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரை விடுதலை செய்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி. அங்கு பயின்ற சில மாணவிகளை உயரதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றுள்ளார். இது தொடர்பாக அவர் மாணவிகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி

இந்த வழக்கு கடந்த 2018ம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 26ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்திருந்தார். இதற்காக முருகன் மற்றும் கருப்புசாமி ஆகியோர் ஆஜராகி இருந்த நிலையில், நிர்மலா தேவி ஆஜராகவில்லை. எனவே வழக்கின் தீர்ப்பை 29ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற வளாகம்

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். தீர்ப்பை வாசித்த நீதிபதி உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிர்மலா தேவியை குற்றவாளி என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

SCROLL FOR NEXT