அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய அருணை மருத்துவக்கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை 
க்ரைம்

மீண்டும் ரெய்டு! எ.வ.வேலுவை விடாமல் துரத்தும் வருமான வரித்துறை

காமதேனு

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறை அதிரடியாக 6 நாட்களுக்கும் மேல் ஆய்வு மேற்கொண்டது. அமைச்சருக்கு சொந்தமான கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்க பணம், நகைகள், சொத்துக்களின் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இவை அனைத்தையும் அமைச்சர் எ.வ.வேலு மறுத்து இருந்தார்.

அருணை மருத்துவக்கல்லூரி

வருமானம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமான வரித்துறை அலுவலகம்

ஏற்கெனவே நடந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரி பார்ப்பதற்காக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவலை வருமானவரித்துறை தெரிவிக்கவில்லை .

மீண்டும் எ.வ.வேலுவை குறி வைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT