மெய்தி லிபூன் இனக்குழு தலைவர் பிரமோத் சிங் 
க்ரைம்

வன்முறை பேச்சு... உயிர் தப்பிய இனக்குழு தலைவர்; துப்பாக்கிச் சூட்டால் மணிப்பூரில் பதற்றம்

காமதேனு

மணிப்பூரில் பிரமோத் சிங் என்ற இனக்குழு தலைவர் சென்ற காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர வன்முறையின் தாக்கம் இதுவரை முழுமையாக அகலவில்லை. பழங்குடி இனத்தவரான குக்கி இனத்தவர் மீது மெய்தி இனத்தவர் நடத்திய தொடர் தாக்குதல்களை அடுத்து இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமானோர் வீடுகளை இழந்து மாநிலத்திற்கு உள்ளேயே அகதிகளாக மாறி உள்ளனர்.

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்

இதனிடையே மெய்தி லீபுன் என்ற இனக்குழுவின் தலைவரான பிரமோத்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது மெய்தி இன மக்கள் மட்டுமே உள்ளூர் மக்கள் எனவும், கும்கி இன மக்கள் உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் வன்முறை ஏற்படுத்தும் வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸாரும் பாதுகாப்புபடையினரும் விசாரணை

இதனிடையே இன்று காலை தலைநகர் இம்பால் அருகே உள்ள லங்கோல் பகுதியில் செயல்படும் மருத்துவமனை ஒன்றுக்கு பரிசோதனைக்காக பிரமோத் சிங் வந்திருந்தார். அப்போது அவரது கார் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 6 துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் பிரமோத் சிங் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT