கார் மோசடி  
க்ரைம்

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து, அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி!

சந்திரசேகர்

தனியார் நிறுவனங்களுக்கு நாள் வாடகைக்கு விடுவதற்காக வாங்கப்பட்ட 34க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை, அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம், திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மருந்தகப் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பர்களிடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாத வாடகைக்கு கார் தேவைப்படுவதாகவும், டிராவல்ஸ் நிறுவன கார் வாடகைக்கு எடுத்தால் அதிக செலவு ஆவதாக கூறி கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்த வாகனங்களை வைத்திருப்பவரிடம் நாள் வாடகைக்கு கார்களை பெற்று பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். இவரை நம்பி நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 34 பேர், தங்களது இன்னோவா கிரிஸ்டா, ஷிப்ட் டிசையர், கிளன்ஸா, டிரைபர் உள்ளிட்ட ரக கார்களை நாள் வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதில், புதியதாக கார் வாங்கியவர்களும் தங்களது காரை வாடகைக்கு விட்டுள்ளனர்.

கோப்புப்படம்

இந்த கார்களை கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் மூலம் வாடகைக்கு விட்டு பணம் தருவதாக கூறி பெற்றுள்ளார். கடந்த 2 மாதங்களாக நாள் வாடகையாக ரூ.1000 முதல் ரூ.15000 வரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வாடகை பணத்தையும், கார் நிலவரம் குறித்தும் எந்த தகவலும் இல்லை. ரமேஷ், மணிகண்டன் ஆகியோரின் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டால், எந்த பதிலும் இல்லாததால், கார் உரிமையாளர்கள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து கார்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சில கார் உரிமையாளர்கள், தங்களது காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி மூலம் தேடும்போது, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கார்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு சென்று காரை திருப்பி கேட்டபோது, தங்களிடம் கார்களை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளனர். அந்த பணத்தை கொடுத்துவிட்டு கார்களை எடுத்துச் செல்லும்படி கூறியதை கேட்டு, கார் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்கள், நெல்லை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்ததுடன், கார்களை வாடகைக்கு பெற்றுக் கொண்ட ரமேஷையும் அழைத்து சென்று இன்று ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், வாடகைக்கு கொடுத்து காணாமல் போன ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கார் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தை கடந்து செல்வதை கார் உரிமையாளர் கண்டறிந்தார். அந்த கார் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நின்றிருப்பதை அறிந்து, போலீசார் உதவியுடன் மீட்டனர். பல கோடி மதிப்பிலான 34 கார்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஜிபிஎஸ் மூலம் கார் பறிமுதல் செய்த சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்... மிகக் கனமழை கொட்டும் என அறிவிப்பு!

அதிர்ச்சி... பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்... பதற்றத்தில் என்ஐஏ அலுவலகம்... தீவிர விசாரணை!

சவுக்கு சங்கரை விடாதீங்க... கள்ளக்குறிச்சி மாணவி தாய் போலீஸில் பரபரப்பு புகார்!

வடமாநிலங்களில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்... கங்கை, யமுனை கரைகளில் குவிந்த மக்கள்!

பிரியாவிடை பெற்றார் தினேஷ் கார்த்திக்... வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT