அஜ்மீரில் உள்ள மசூதியில் மதகுரு கொலை
அஜ்மீரில் உள்ள மசூதியில் மதகுரு கொலை 
க்ரைம்

அதிகாலையில் முகமூடிஅணிந்து வந்த மர்ம நபர்கள்... அஜ்மீர் மசூதியில் மதகுரு கொலை!

காமதேனு

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள ஒரு மசூதி ஒன்றில் மதகுரு ஒருவர் இன்று கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு மேலும் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரின் ராம்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட காஞ்சன் நகரில் முகமதி மதீனா மசூதி உள்ளது. இங்கு மதகுருவாக இருந்த வந்தவர் முகமது மாஹிர் (30). இவர் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தின் ராம்பூரை சேர்ந்தவர். மசூதியில் முகமது மாஹிருடன் சில சிறுவர்களும் வசித்து வந்தனர்.

மதகுரு கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த மசூதிக்கு முகமூடி அணிந்து வந்த 3 மர்ம நபர்கள், முகமது மாஹிரை கொலை செய்தனர். இந்த சம்பவம் நடந்த போது, மசூதியில் இருந்த 6 சிறுவர்களை சத்தம் போடக்கூடாது என, மர்ம நபர்கள் அச்சுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதும் சிறுவர்கள் சத்தம் போட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரியவந்தது.

தகவலறிந்த ராம்கஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் ரவீந்திர கிஞ்சி தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர், முகமது மாஹிரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறுகையில், எதற்காக இந்த கொலை சம்பவம் நடந்தது என்பது தெரியவரவில்லை.

அஜ்மீரில் உள்ள மசூதியில் மதகுரு கொலை

மசூதி அமைந்துள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது. மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது” என்றனர்.

இதற்கிடையே, மதகுரு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த மசூதி நிர்வாகத்தினரும், முஸ்லிம் சமூகத்தினரும், கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கொலை சம்பவம் அஜ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

SCROLL FOR NEXT