ஷாருக் விழுந்த பாதாளச்சாக்கடை
ஷாருக் விழுந்த பாதாளச்சாக்கடை 
க்ரைம்

திறந்து கிடந்த பாதாளச் சாக்கடை... உள்ளே விழுந்த 8 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்!

காமதேனு

சாலையில் திறந்து கிடந்த பாதாளச் சாக்கடை குழியில் விழுந்த 8 வயது சிறுவன், நீண்ட நேர போராட்டத்திற்கு மயங்கி நிலையில் மீட்கப்பட்டும் உயிரிழந்த சம்பவம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசக மாநிலம், லக்னோவில் உள்ள ஜானகிபுரம் விரிவாக்கத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ளது பண்டேரா. இப்பகுதியைச் சேர்ந்த ஷாருக்(8) என்ற சிறுவன், தனது சகோதரியுடன் வீட்டிற்கு நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார்.

லக்னோ

அப்போது அந்த பகுதியில் திறந்த வெளி பாதாளச்சாக்கடை இருந்துள்ளது. சாலையி குழியிருப்பதைத் தெரியாமல் அதற்குள் ஷாருக் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி, தனது தம்பியைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், முடியவில்லை.

இதனால், அவர் அக்கம் பக்கத்தினரிடம், தனது சகோதரன் பாதாளச்சாக்கடைக்குள் விழுந்து விட்டதைக் கூறினார். இதையடுத்து அப்பகுதி மக்கள், போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஷாருக்கை மீட்க கடுமையாக போராடினர். பல மணி நேரமாக போராடி மயங்கிய நிலையில் இருந்த ஷாருக்கை மீட்டனர்.

அங்கிருந்து உடனடியாக ஷாருக்கை கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஷாருக்கின் பூர்வீகம் சீதாபூராகும். அவரது தந்தை லக்னோவில் தள்ளுவண்டியில் பொருட்களை விற்கும் தொழிலாளியாவார்.

கிங் ஜார்ஜ் மருத்துவமனை

இச்சம்பவம் குறித்து வடக்கு கூடுதல் காவல் ஆணையர் கூறுகையில், எட்டு வயது சிறுவன் ஏகேடியு அருகே உள்ள மேன்ஹோலில் விழுந்ததாக தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் குழுவுடன் சென்றார். போலீஸார் மட்டுமின்றி எஸ்டிஆர்எஃப் குழுவினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஷாருக்கை மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால்,அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றார்.

அரசின் அலட்சியத்தால் அப்பாவி குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அரசுத்துறையின் பெரும் அலட்சியம் ஒரு குழந்தையின் உயிரைப் பறித்துள்ளது என்றும் புகார் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

SCROLL FOR NEXT