இந்தியா கேட்
இந்தியா கேட் 
க்ரைம்

ஐஸ்கிரீம் விற்றவர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை... இந்தியா கேட் அருகே பயங்கரம்!

காமதேனு

டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே ஐஸ்கிரீம் விற்பவர் நேற்று நள்ளிரவு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இந்தியா கேட் அருகே ஒருவர் ரத்த வெள்ளத்தில் நேற்று நள்ளிரவு கிடப்பதைக் கண்ட வாகன ஓட்டிகள், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீஸ் விசாரணை

இதையடுத்து சம்பவம் நடைபெற்ற இந்தியா கேட் அருகே போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டவர் பிரபாகர்(25) என்பது தெரிய வந்தது. இவர் இந்தியா கேட் பகுதியில் ஐஸ்கிரீம் விற்பவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரை யார் குத்திக் கொலை செய்தது என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ள போலீஸார், அப்பகுதியில் கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பிரபாகரின் உடலில் மூன்று இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. அதில் ஒன்று ஆழமாக இருந்துள்ளது. அத்துடன் இறந்த பிரபாகரின் பையில் இருந்து கொஞ்சம் பணம், கைக்கடிகாரம் மற்றும் ஒரு பை ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஐபிசி 302 பிரிவின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடி வருகின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இந்தியா கேட் அருகே ஐஸ்கிரீம் விற்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

SCROLL FOR NEXT