க்ரைம்

ஜம்மு காஷ்மீர் சோகம்... ஆற்றில் பள்ளி மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து 4 பேர் பலி!

காமதேனு

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஜீலம் ஆறு உட்பட பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஜீலம் ஆற்றில் ஸ்ரீநகரில் உள்ள கந்த்பாலில் இருந்து பட்வாராவுக்கு 12 பள்ளி மாணவர்கள் உட்பட பயணிகள் இன்று காலை படகில் பயணம் செய்தனர். படகு ஆற்றின் நடுவே சென்றபோது திடீரென பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்து ஆற்றில் விழுந்த மாணவர்கள் உள்ளிட்டோர் தண்ணீர் தத்தளித்து உயிருக்காக போராடினர்.

படகு கவிழ்ந்து ஆற்றில் விழுந்தவர்களை தேடும் பணி நடக்கிறது.

விவரம் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ஜம்மு காஷ்மீர் பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள், ஆற்றில் தத்தளித்த 12 பேரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நீரில் மூழ்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் பலியான சம்பம் ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

SCROLL FOR NEXT