நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, விஜய் நடித்த விலங்குகளை மையப்படுத்தி வைக்கப்பட்டப் படங்களின் தலைப்பு தந்த ரிசல்ட் இந்தப் படத்திற்கும் தொடருமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
’லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மீனாட்சி செளத்ரி கதாநாயகியாக நடிக்க பிரபுதேவா, சிநேகா, லைலா, ஜெயராம், மோகன் எனப் பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
சென்னையில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் மாஸான ஆக்ஷன் காட்சிகளும், நடனக்காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்து, துருக்கியில் நடந்தது. இந்த நிலையில், டீஏஜிங் டெக்னாலஜியைப் பயன்படுத்தி நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம் என்ற தகவலும் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று மாலை புத்தாண்டு கொண்டாட்டமாக படத்தின் டைட்டிலோடு முதல் பார்வை போஸ்டரும் வெளியானது. இதில் அப்பா-மகன் என்ற இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். மேலும் படத்தின் தலைப்பு 'GOAT- Greatest Of All the Time' என வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பார்வை சுமாராக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதற்கு முன்பு விஜயின் படங்களுக்கு ‘சுறா’, ‘குருவி’, ‘புலி’, ‘பீஸ்ட்’, ‘பைரவா’, ‘லியோ’ எனத் தலைப்பு வைத்து எல்லாம் தோல்வியைத் தழுவியது. அதுபோல, இந்த ’GOAT’ தலைப்பை தமிழில் ஆடு எனச் சொல்லி இந்த அனிமல் செண்டிமென்ட் இந்தப் படத்துக்கும் தொடருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
2024-ல் தேர்தலைச் சந்திக்கும் 40 நாடுகள்... இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியம்?
புத்தாண்டு பரிசு... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட்!
ஆபாசமாக உடை அணிந்த மனைவி; கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்: திருமணமான 6 மாதத்தில் பயங்கரம்!
அதிர்ச்சி... மாணவியைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம்: வீடியோ எடுத்து ரசித்த பாஜக நிர்வாகிகள் கைது!