விஜய் தேவரகொண்டா 
சினிமா

முதல் விருதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டேன்... ரசிகர்களை கொதிக்க வைத்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

காமதேனு

”விருதுகள் மீது தனக்கு பெரிதாக அட்டாச்மென்ட் இல்லை. என்னுடைய முதல் விருதை நான் ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டேன்” எனக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

நடிகர் விஜய் தேவரகொண்டா.

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கான அங்கீகாரமாகவே விருதுகள் இருக்கிறது. அப்படியான விருதின் மீது தனக்கு எந்தவிதமான அட்டாச்மென்ட்டும் இல்லை என நடிகர் விஜய் தேவரகொண்டா சொல்லி இருக்கிறார். விஜய் தேவரகொண்டா, மிருணாளினி தாக்கூர் நடித்த ‘ஃபேமிலி ஸ்டார்’ படம் ஏப்ரல் 5 அன்று வெளியாகிறது. இந்தப் படத்திற்காக, நடிகர் விஜய் தேவரகொண்டா யூடியூப் தளம் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார். அதில், சிறந்த நடிகருக்காக தான் வாங்கிய முதல் விருதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டதாக அவர் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அந்தப் பேட்டியில் அவர், “சில விருதுகள் அலுவலகத்தில் இருக்கும். சிலவற்றை வீட்டில் அம்மா வைத்திருப்பார். அந்த விருதுகளில் எது என்னுடையது, எது என்னுடைய தம்பியுடையது என்று எனக்குத் தெரியாது.

விஜய் தேவரகொண்டா

’அர்ஜூன் ரெட்டி’ படத்திற்காக நான் வாங்கிய விருதுகளை அந்தப் படத்தின் இயக்குநர் சந்தீப்பிடம் கூட கொடுத்திருக்கிறேன். முதல் முறையாக சிறந்த நடிகருக்காக ஃபிலிம்பேரில் எனக்குக் கிடைத்த விருதை ஏலம் விட்டோம். அதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார்கள். விருது என்ற பெயரில் வீட்டில் ஒரு கல்லாக இருப்பதை விட அதை ஏலம்விட்டதில் நல்ல பணம் கிடைத்தது. அந்தப் பணத்தைத் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினேன்” என்று கூறியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா தனக்குக் கிடைத்த விருதை ஏலத்தில் விட்டதாக சொன்ன விஷயம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ’விருதுகளை இப்படி அலட்சியப்படுத்த வேண்டாம்’ என்றும் ’அப்படி விருதுகள் மீது நம்பிக்கை என்றால் ஆரம்பத்திலேயே மறுக்கலாம். மேடை ஏறி வாங்கிவிட்டு பின்பு ஏலத்தில் விடுவது முறையல்ல’ என்றும் நெட்டிசன்கள் பலரும் விஜய் தேவரகொண்டாவின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...    


வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT