அனுஷ்கா
அனுஷ்கா 
சினிமா

மலையாள சினிமாவில் நடிக்கிறார் அனுஷ்கா... சம்பளம் இத்தனை கோடியா?

காமதேனு

பல வருடங்கள் கழித்து ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி’ படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் அனுஷ்கா. படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அவருக்கு அடுத்தடுத்து தெலுங்கு திரையுலகில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், மலையாளத் திரையுலகில் என்ட்ரி கொடுக்கப் போகிறார் அனுஷ்கா.

சினிமாவில் திரைக்கலைஞர்கள் சின்ன பிரேக் எடுத்தாலும் அடுத்து அவர்களுக்கான வாய்ப்புகளும் அவர்களது இடமும் பழையபடி நிலைத்திருப்பது சிரமமான விஷயம்தான். அப்படியான ஒரு சிக்கலை சந்தித்து இருக்கிறார் நடிகை அனுஷ்கா.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் அனுஷ்காவுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால், ’அருந்ததி’, ‘பாகுபலி’, ‘பாகமதி’ எனத் தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்துமே தனிப்பட்ட சில காரணங்களுக்காக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்பு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படம் மூலம் தமிழ், தெலுங்கில் கம்பேக் கொடுத்தார்.

பெரிய அலட்டல் இல்லாமல் வெளிவந்த இந்தப் படம் அதன் கதைக்களத்திற்காக ஹிட் ஆனது. ஆனாலும், அடுத்தடுத்து தமிழ்- தெலுங்கில் அனுஷ்காவுக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை என சொல்லப்படுகிறது.

படக்குழுவினருடன் அனுஷ்கா

இதனால், இப்போது மலையாள திரையுலகப் பக்கம் ஒதுங்கி இருக்கிறார் அனுஷ்கா. ’கத்தனார் - தி வொயில்ட் சார்சரர்’ என இதற்கு தலைப்பிடப்பிட்டுள்ளது. இதன் கதாநாயகனா ஜெயசூர்யா நடிக்கிறார். கிறிஸ்துவ பாதிரியாரின் கதையை இந்தப் படம் சொல்ல இருக்கிறது. இதில் காட்டு நீலியாக நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் அனுஷ்கா. இந்தப் படத்திற்கு மட்டும் அவர் சுமார் ரூ. 5 கோடி சம்பளம் பேசியிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் படக்குழுவினருடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அனுஷ்கா.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி... ஓபிஎஸ் உறுதியால் சின்னம் முடங்குமா?

பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!

சிஎஸ்கே அணிக்கு 'தல' தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?... செயல் அதிகாரி கொடுத்த ட்விஸ்ட்!

விடிய, விடிய பேச்சுவார்த்தை... பாஜக அணியில் டி.டி.வி. தினகரனுக்கு 4, ஓபிஎஸ்சுக்கு 2 தொகுதிகள்!

SCROLL FOR NEXT