சினிமா

வருவேன் என்று சொன்னால் நிச்சயம் வருவேன்... ரஜினியை சீண்டிய நடிகர் விஷால்!

காமதேனு

”மற்றவர்களைப் போல வரேன்... வரும்போது வருவேன், வராம போய் விடுவேன் என்பதெல்லாம் அரசியலில் என்னுடைய நிலைப்பாடு இல்லை” என நடிகர் விஷால் பேசியிருக்கிறார். தங்கள் தலைவரைப் பற்றிதான் அவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று ரஜினி ரசிகர்கள் அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

நடிகர் விஜயை அடுத்து விஷாலும் அரசியலில் குதித்து இருக்கிறார். அவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அவருடைய ‘ரத்னம்’ படம் வருகிற 26-ம் தேதி வெளியாகிறது. இதுதொடர்பாக அவர் யூடியூப் தளங்களுக்கு பேட்டிக் கொடுத்து வருகிறார். இதில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் படங்கள் வெளியிடுவது மற்றும் சினிமாத் துறையில் ஆதிக்கம் செலுத்துவது குறித்தெல்லாம் பேசி பரபரப்பு கிளப்பினார் விஷால்.

நடிகர் விஷால்

இப்போது நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து மறைமுகமாகப் பேசி ரஜினி ரசிகர்களிடம் இணையத்தில் திட்டு வாங்கி வருகிறார்.

விஷாலின் அரசியலில் என்ட்ரி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மற்றவர்களைப் போல வரேன், வரும்போது வருவேன், வராமப் போய் விடுவேன் என்பதெல்லாம் அரசியலில் என்னுடைய நிலைப்பாடு இல்லை. வருவேன் என்று சொன்னால், நிச்சயம் வருவேன். மக்களுக்கு அரசியலில் என்னுடைய தேவை இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை” எனக் கூறினார்.

இந்த ஒரு விஷயம்தான் ரஜினி ரசிகர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. இதற்கு முன்பு ‘ரஜினிக்கு தலித் அரசியல் தெரியுமா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு இயக்குநர் இரஞ்சித் நக்கலாக சிரித்தது சர்ச்சையானது. பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் எனச் சொல்லி காலம் கடத்திய நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் காரணமாகச் சொல்லி ”இனி எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன்” என அறிவித்தார்.

இந்த விஷயத்தைத்தான் விஷாலும் மறைமுகமாகக் குத்திக் காட்டி இருக்கிறார். இது ரஜினி ரசிகர்களை கோபமடையச் செய்திருக்கிறது. அப்போது இரஞ்சித், இப்போது விஷால் என இணையத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

இதையும் வாசிக்கலாமே...  

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

SCROLL FOR NEXT