நடிகை தமன்னா
நடிகை தமன்னா 
சினிமா

ஐபிஎல் ஸ்ட்ரீமிங் விவகாரம்... நடிகை தமன்னாவுக்கு சம்மன்!

காமதேனு

ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்ததில் நடிகை தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிரா சைபர் செல் விசாரணைக்கு, விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சட்டவிரோத ஐபிஎல் போட்டிகள் ஸ்ட்ரீமிங் வழக்கில், ஐபிஎல் போட்டிகளின் விளம்பர தூதுவர்களில் ஒருவரான நடிகை தமன்னா பாட்டியாவின் பெயர் வெளிவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக தமன்னாவை மகாராஷ்டிரா சைபர் செல் வரும் ஏப்ரல் 29-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமன்னா

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றொரு நபராக நடிகை சஞ்சய் தத் பெயரும் இணைந்துள்ளது. அவர் இந்த வாரத் தொடக்கத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது பிஸி ஷெட்யூல் காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை எனவும் இதனால் வேறு தேதியை அவர் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.

’கடந்த 2023ல் நடந்த ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே (Fair play App) செயலியில் சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்தது தொடர்பாக, வயாகாமுக்கு (Viacom18) கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமன்னா பாட்டியாவை மகாராஷ்டிரா சைபர் விசாரணைக்கு அழைத்துள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி மகாராஷ்டிரா சைபர் முன் ஆஜராகும்படி அவர் கேட்கப்பட்டுள்ளார்’ என்று ஏஎன்ஐ செய்தி முகமை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

செப்டம்பர் 2023 ல், ஐபிஎல் போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்வதற்கான அறிவுசார் சொத்துரிமைகளை ( Intellectual Property Rights) வைத்திருப்பதாக Viacom18 புகார் செய்ததை அடுத்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஃபேர்பிளே செயலி ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்து வந்தது.

இதனால் Viacom18க்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டது. எப்ஐஆரைத் தொடர்ந்து பாடகர் பாட்ஷா, நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். டிசம்பர் 2023-ல் ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

SCROLL FOR NEXT