டாடா மோட்டார்ஸின் வணிக வாகனங்கள்
டாடா மோட்டார்ஸின் வணிக வாகனங்கள் 
பொருளாதாரம்

இரண்டாக உடைபடும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... தனித்தனியாக பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு

காமதேனு

நாட்டின் பிரசித்தி பெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பயணிகள் மற்றும் வணிகம் சார்ந்தது என இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.

இந்தியாவின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக அபரிமித வளர்ச்சியைப் பெற்று வருகிறது. டாடா குழுமத்தின் ஆரோக்கியமான அங்கமான டாடா மோட்டார்ஸ், சர்வதேசளவில் சிறப்பு மிக்க வாகனங்களை உருவாக்கி வருகிறது. இதனால் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடு வரை டாடா மோட்டார்ஸ் வாகனங்கள் விற்பனையில் வென்று வருகின்றன.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸின் பயணியர் வாகனங்கள் பாதுகாப்பு அம்சத்தில் அசைக்க முடியாத வகையில் முன்னணி இடம் பிடித்துள்ளது. குறிப்பாக அதன் பிரதான போட்டியாளரான மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் உடனான மோதலில், பாதுகாப்பு அம்சங்களில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி, முதலீட்டாளர்கள் மத்தியிலேயும் டாடா மோட்டார்ஸ் பங்குகளுக்கு பெரும் ஆதரவு நிலவி வருகிறது.

இந்த சூழலில் டாடா மோட்டார்ஸை, வணிக வாகனங்கள் - பயணிகள் வாகனங்கள் என இரண்டாக பிரிக்கும் முடிவை டாடா நிறுவனம் எடுத்துள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிக்கப்பட்டு, 2 தனி நிறுவனங்களாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்றைய தினம்(மார்ச் 4) பங்குச்சந்தைகளுக்கு தெரிவித்தது.

டாடா நிக்ஸான்

இதன்படி டாடா மோட்டார்ஸின் பயணியர் தேவைக்கான பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்கள் தனியாக பிரிக்கப்படும். இதனுடன் ஜாகுவர் லேண்ட் ரோவர் வர்த்தகமும் உள்ளடங்கி இருக்கும். இவை தவிர்த்த இதர வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் தனியாக பட்டியலிடப்படும். தற்போது அறிவிப்பாகும் இந்த பிரிப்பு நடவடிக்கைகள் முழுமையாக அமலாக இன்னமும் 12 முதல் 15 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். மேலும் இந்த பிரிப்பு நடவடிக்கைகள் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் எந்தவிதமான பாதகமான தாக்கத்தையும் விளைவிக்காது எனவும் டாடா மோட்டார்ஸ் விளக்கமளித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தேர்தல் 2024 | மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு... நடிகர் வடிவேலு பேச்சு!

கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை; வைரலாகும் வீடியோ!

இனி... 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!

சவுரவ் கங்குலியின் பயோபிக் படத்தில் நடிகர் ரஜினி... குஷியில் ரசிகர்கள்! எகிறும் எதிர்பார்ப்பு!

பாஜக வேட்பாளரின் ஆபாச வீடியோ... ரவுண்ட் கட்டும் எதிர்கட்சிகள்!

SCROLL FOR NEXT