வங்கி பெட்டகம் 
பொருளாதாரம்

இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி கணக்குகள்... வெளியானது 5வது பட்டியல்!

காமதேனு

ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தொடர்பான அடுத்த பட்டியலை இந்தியா பெற்றுள்ளது.

ஸ்விஸ் வங்கியில் தங்களது நிதியை பதுக்குவது சர்வதேச அளவில் பிரபலமானது. ஸ்விஸ் வங்கியாளர்கள் கடைபிடித்த வாடிக்கையாளர் அனுகூலங்களும், ரகசியத் தன்மையும் இவற்றுக்கு காரணமாயின. ஆனால் ஊழல், நிதிமோசடி, வருமான வரிக்கணக்கில் வராதவை, பயங்கரவாத செயல்களுக்கானவை என பல்வேறு மோசடி பின்னணியுடன் சேர்த்த கறுப்பு பணத்தை ஸ்விஸ் வங்கியில் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஸ்விஸ் வங்கி

இதனையடுத்து, சர்வதேச நாடுகள் சுவிட்சர்லாந்துடன் மேற்கொண்ட அழுத்தம் காரணமாக, தனது வாடிக்கையாளர் கணக்கு விவரங்களை வாடிக்கையாளர் சார்ந்த நாடுகளுடன் ஸ்விஸ் வங்கி பகிர வேண்டியதானது. இதன் அடிப்படையில் வருடாந்திரம் தானியங்கி தகவல் பரிமாற்றமாக, ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்கள் பகிரப்பட ஆரம்பித்தன. இந்த வகையில் இதுவரை 104 நாடுகளுடன் சுமார் 36 லட்சம் நிதிக்கணக்குகளின் விவரங்களை ஸ்விஸ் வங்கி பகிர்ந்துள்ளது.

தற்போது இந்தியாவுடனான 5வது வருட பட்டியலில் தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தொடர்பான விவரங்களை இந்தியாவுடன் ஸ்விஸ் வங்கி பகிர்ந்துள்ளது. பெயர், முகவரி, வசிக்கும் நாடு, வரி அடையாள எண், வங்கிக் கணக்கு, நிதி பரிவர்த்தனைகள், கணக்கு இருப்பு மற்றும் மூலதன வருமானம் உள்ளிட்டவை இந்த தகவல்களில் அடங்கும்.

ஸ்விஸ் வங்கி

ஸ்விஸ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட தனது குடிமக்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்களை இந்தியா பொதுவில் வெளியிடாது. எனினும் சந்தேகத்துக்குரிய கணக்குகள் மற்றும் அவற்றின் நிதி பரிமாற்றங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உரிய விசாரணை அமைப்புகள் உதவியோடு அவை ஆராயப்படும். மேலும் வரி ஏய்ப்பு, நிதி மோசடி, பரிவர்த்தனைகளில் பயங்கரவாத தொடர்பு உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்படும்.

இந்தியாவின் இந்த கண்காணிப்பு மற்றும் ஆய்வு காரணமாக, கடந்த ஆண்டே இந்தியர்களின் ஸ்விங் வங்கி இருப்பு 11% குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!

‘இஸ்ரேலில் நடக்கும் படுகொலைக்கு உடனே குரல் கொடுக்கும் மோடி, மணிப்பூர் பிரச்சினையில் மவுனம் காப்பது வெட்கக்கேடு’

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT