விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கோடி... பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக பெருமிதம்

பிரதமர் மோடியின் விவசாயிகளுக்கான நிதியுதவி
பிரதமர் மோடியின் விவசாயிகளுக்கான நிதியுதவி

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இதுவரை 3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள பிரதம மந்திரியின் கிசான் திட்டம், உலகின் மிகப்பெரும் நேரடி பயன் பரிமாற்ற திட்டங்களில் ஒன்று. இதன் கீழ், விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

விவசாயி
விவசாயி

மகாராஷ்டிராவில் உள்ள யவத்மாலில் இருந்து 16வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டதன் மூலம், இத்திட்டம் 11 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயி குடும்பங்களுக்கு பயன் சேர்த்துள்ளது. இதில், கொரோனா காலத்தில் மட்டும் விவசாயிகளுக்கான நேரடி பணப்பலனாக ரூ.1.75 லட்சம் கோடி வழங்கப்பட்டது.

தேசத்தின் விவசாயக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 2019, பிப்ரவரியில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்பதை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் தகுதியுள்ள விவசாயி குடும்பங்களுக்கு, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ2,000வீதம், மூன்று சம தவணைகளில், ஆண்டுக்கு ரூ.6,000 பணப்பலனாக வழங்கப்படுகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் இந்த நிதியுதவி நேரடியாக சென்று சேரும்.

அண்மையில், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் ஒரு பகுதியாக, 2.60 லட்சத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் செறிவூட்டப்படுவதை உறுதி செய்யும் வகையில், 90 லட்சம் தகுதியான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 5ஆண்டுகளில், இத்திட்டம் பல மைல்கற்களைத் தாண்டி, உலக வங்கி உட்பட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இவ்வாறு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இன்றைய தினம் விரிவான விவரங்களை அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாய சங்கங்கத்தினர் போராடி வருவது மற்றும், மக்களவைத் தேர்தலுக்கான தேதி எதிர்பார்க்கப்படும் சூழல் ஆகியவற்றின் மத்தியில் விவசாயிகளுக்கான ரூ3 லட்சம் கோடி குறித்தான மத்திய அரசின் விளக்கம் கவனம் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

2024ல் சக்தி வாய்ந்த 100 இந்தியர்கள்... மோடி முதலிடம்... அமித்ஷா இரண்டாமிடம்... அசரடித்த பட்டியல்!

மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் காதலியுடன் திருமணம்... வைரலாகும் வீடியோ!

சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: செல்வப்பெருந்தகை தடாலடி பேட்டி!

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ எங்களிடம் இருக்கு... பணம் கேட்டு மிரட்டிய பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது!

மேட்ரிமோனி இணையதளங்கள் மூலம் வலை; கஸ்டம்ஸ் ஆபீசர் என பொய்... 259 பெண்களை ஏமாற்றிய பலே மோசடி மன்னன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in