புதிய ‘டெய்ரி மில்க்’ சாக்லேட்டில் மண்டியிருந்த பூஞ்சை... அதிர்ச்சி வாடிக்கையாளரை சமாதானப்படுத்தும் காட்பரீஸ்

பூஞ்சை படர்ந்த டெய்ரி மில்க்
பூஞ்சை படர்ந்த டெய்ரி மில்க்

டெய்ரி மில்க் புதிய சாக்லேட்டில் பூஞ்சையை அடையாளம் கண்டு அதிர்ந்துபோன வாடிக்கையாளருக்கு காட்பரீஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

வயது வித்தியாசமின்ரி சாக்லேட்டை ருசிப்போர் பரவலாக நம்மிடையே நிறைந்துள்ளனர். அதன் ஆரோக்கியம் சார்ந்த உபயோகம் காரணமாகவும் சாக்லேட்டுகள் அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. இதனால் சாக்லேட் நிறுவனங்கள் காட்டில் எப்போதும் வருவாய் மழை குறையாது இருக்கிறது.

டெய்ரி மில்க் சாக்லேட்
டெய்ரி மில்க் சாக்லேட்

இனிப்பான சாக்லேட் நாடும் வாடிக்கையாளர்களுக்கு, சில சமயங்களில் கசப்பான அனுபவங்களும் வாய்த்துவிடுகின்றன. அப்படி ஹைதராபாத்தை சேர்ந்த நுகர்வோர் ஒருவர், புதிதாய் வாங்கிய சாக்லேட் பாக்கெட்டை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். காரணம் இன்னமும் காலாவதி தேதியை எட்டாத, அப்போதுதான் பிரித்த அந்த சாக்லேட்டில் பூஞ்சை படர்ந்து இருந்தது.

தனது கசப்பான அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்து மனம் ஆற விரும்பிய அவர் கெட்டுப்போன அந்த சாக்லேட்டின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். எக்ஸ் தளத்தில் பூஞ்சை பாதித்த சாக்லேட் புகைப்படங்களை பகிர்ந்த வாடிக்கையாளர், “இந்த சாக்லேட் உற்பத்தி நாள் ஜனவரி 2024 என உள்ளது. இதிலிருந்து ஒரு வருடத்தின் முடிவில்தான் சாக்லேட் காலாவதியாகும். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே இப்படியாகிவிட்டது” என புலம்பியிருந்தார்.

இந்த பதிவின் கீழே பதிலளித்த பலரும், தங்களுக்கும் அம்மாதிரியான கசப்பான அனுபவங்கள் நேரிட்டிருப்பதாக பதில் தந்தனர். இன்னும் சிலர் உடனடியாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து எக்ஸ் தளத்தில் உதயமான சாக்லேட் நிறுவனம் தனது வாடிக்கையாளாரின் மோசமான அனுபவத்துக்கு வருத்தம் தெரிவித்தது. மேலும், “மிக உயர்ந்த தரத்தையே பராமரிக்க முயற்சிக்கிறோம். எனினும் நீங்கள் விரும்பத்தகாத அனுபவத்தைப் பெற்றதற்காக வருந்துகிறோம்” என்று தெரிவித்திருந்தது. எக்ஸ் தளத்தில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in