மீண்டும் தலையெடுக்கும் பாஜகவின் பழைய தலைவலி; தலைநகரை முற்றுகையிட்டு போராட விவசாயிகள் அதிரடி முடிவு

விவசாயிகளின் முந்தைய போராட்டம்
விவசாயிகளின் முந்தைய போராட்டம்

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளுடன், பல்வேறு விவசாய சங்கத்தினர் தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று போராட முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக அரசு உத்திரவாதமளித்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தவும், அதன்பொருட்டு மீண்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். பிப்ரவரி 13-ம் தேதியை இதற்காக நாள் குறித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை, சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் இன்று வெளியிட்டார்.

விவசாயிகளின் முந்தைய போராட்டம்
விவசாயிகளின் முந்தைய போராட்டம்

நாடு முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், இந்த ’டெல்லி சலோ’ அணிவகுப்பில் பங்கேற்கும் என்று தலேவால் தெரிவித்தார். சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சாவின் சார்பில் சண்டிகரில், செய்தியாளர்களிடம் பேசிய தலேவால் இன்று இதனை அறிவித்தார். முன்னதாக மத்திய அரசு அறிவித்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, பல்வேறு விவசாய சங்கங்கள் கூட்டாக சேர்ந்து டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.

விவசாயிகளின் போராட்டம் உக்கிரம் பெற்றதாலும், மாநிலத் தேர்தல்கள் நெருங்கியதாலும் மத்திய அரசு அந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. விவசாயிகள் போராட்டத்தின்போது, மத்திய அரசு அளித்த உத்திரவாதங்களில் ஒன்றாக, வேளாண் விளைபொருட்களுக்கு ​​குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதும் அடங்கும். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக, அரசாங்கம் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று தலேவால் குற்றம்சாட்டுகிறார்.

விவசாயிகளின் முந்தைய போராட்டம்
விவசாயிகளின் முந்தைய போராட்டம்

அரசின் மறதியை சுட்டிக்காட்டி விவசாயிகளின் உரிமையை மீளப்பெற பஞ்சாப் மட்டுமின்றி, ஹரியானா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் அணிவகுப்பில் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என்று தலேவால் தெரிவித்திருக்கிறார். கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் என்பவர் கூறுகையில், ’குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ அமலாக்கம் மட்டுமின்றி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் போராட்டத்தின்போதான போலீஸ் வழக்குகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த பேரணியில் விவசாயிகள் போராட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in