அடுத்த அதிர்ச்சி... கேரளாவில் கொசு மூலம் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல் வேகம்! பலருக்கு பாதிப்பு; ஒருவர் கவலைக்கிடம்

 கொசு
கொசு

அண்டை மாநிலமான கேரளாவில் கொசு மூலம் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல் புதிய அச்சுறுத்தலாக பரவத் தொடங்கியுள்ளது.

கேரள மாநிலத்தின் திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில், மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு கண்டவர்கள் அதிகரித்து வருவதாக கேரள அரசு இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களும் விழிப்புடன் இருக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோழிக்கோடு பகுதியில் நோய்த்தொற்றிய 5 நபர்களை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிய வருகிறது.

அமைச்சர் வீணா ஜார்ஜ்
அமைச்சர் வீணா ஜார்ஜ்

க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவும் வைரஸ் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொசுக்கள் பெருகும் இடங்களை அழிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறிய அமைச்சர், காய்ச்சலின் அறிகுறிகள் அல்லது மேற்கு நைல் நோய்த்தொற்றின் பிற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.

மேற்கு நைல் நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், தசைவலி, தலைச்சுற்றல் மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவை உள்ளன. ஆனால் இந்த அறிகுறிகள் இல்லாதும் வெஸ்ட் நைல் காய்ச்சல் எழலாம். இந்த அறிகுறிகளை அனுபவிப்பதோடு, அரிதாக மூளை பாதிப்புக்கும் இது வழிவகுக்கும். எனவே சுயநினைவு இழத்தல் முதல் மரணம் ஏற்படுவது வரை ஆபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது. ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு இணையாக அடையாளம் காணப்பட்டாலும், அதனை விட இறப்பு விகிதம் வெஸ்ட் நலில் குறைவு.

வெஸ்ட் நைல் வைரஸ் ரத்த பரிசோதனை
வெஸ்ட் நைல் வைரஸ் ரத்த பரிசோதனை

வெஸ்ட் நைல் வைரஸுக்கு எதிராக தற்போதைக்கு மருந்து மற்றும் தடுப்பூசி ஏதும் இல்லை என்பதால் வெஸ்ட் நைல் காய்ச்சல் கூடுதல் கவனிப்பை கோருகிறது. எனவே கொசுக்கடியை தவிர்க்கும் வகையில் ஆடை அணியவும், தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் முதன்முதலில் 1937-ல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இந்த காய்ச்சல் கேரளாவில் 2011-ல் அடையாளம் காணப்பட்டது. மலப்புரத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் இந்த காய்ச்சலால் 2019-ல் இறந்தான். அதன்பிறகு, மே 2022-ல், திருச்சூர் மாவட்டத்தில் 47 வயது நபர் காய்ச்சலால் இறந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in