மருந்தை சந்தைப்படுத்த வெளிநாட்டு மாநாடு, ஹோட்டல் விருந்தோம்பல் கூடாது... மத்திய அரசின் கிடுக்குப்பிடி கட்டுப்பாடுகள்!

இந்திய அரசின்  யுசிபிஎம்பி-2024 விதிமுறை
இந்திய அரசின் யுசிபிஎம்பி-2024 விதிமுறை

மருந்துகளை சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மருந்து, மாத்திரைகள்
மருந்து, மாத்திரைகள்

மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள யுசிபிஎம்பி-2024 விதிமுறைகளின் படி, மருந்து தயாரிப்பு, சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மருத்துவர்களுக்காக மாநாடுகளை வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யக்கூடாது. எந்தவொரு மருத்துவப் பணியாளர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட நலனுக்காக பரிசுகளை வழங்கக்கூடாது.

ஹோட்டலில் தங்குவது, விலையுயர்ந்த உணவு வகைகள், மருத்துவ நிபுணர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரிசார்ட் தங்குமிடம் போன்ற விருந்தோம்பலை வழங்கக்கூடாது. மருத்துவ மாநாடுகளின் பேச்சாளருக்கு மட்டும் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருந்து நிறுவனங்கள் வழங்கும் பிராண்ட் நினைவூட்டல் மதிப்பானது ரூ.1,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மருத்துவர்
மருத்துவர்

மருந்து நிறுவனங்களின் மருத்துவ அல்லது விற்பனை பிரதிநிதிகள், சந்திப்பை பெறுவதற்கு எந்தவொரு தூண்டுதல் அல்லது தந்திரங்களை பயன்படுத்தக்கூடாது. மேலும் ஒரு மருத்துவரை அணுகுவதற்கு அவர்கள் எந்த போர்வையிலும் பணம் செலுத்தக்கூடாது எனவும் யுசிபிஎம்பி விதிமுறை கூறுகிறது.

மேலும், மருத்துவர்களுடனான இணக்கத்தை உறுதி செய்வதற்காக மருத்துவ பிரதிநிதிகள் உட்பட தங்கள் ஊழியர்களின் செயல்பாடுகளுக்கு மருந்து நிறுவனங்கள் பொறுப்பாகும். இது நிறுவனத்திற்கும் அதன் மருத்துவ பிரதிநிதிகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் பொருத்தமான பிரிவு மூலம் கூடுதலாக உறுதி செய்யப்பட வேண்டும்.

மருந்து விற்பனை
மருந்து விற்பனை

ஒரு நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட இந்த நெறிமுறை, வழிகாட்டுதல்களை மீறுவது கண்டறியப்பட்டால் அபராதம், சங்கத்திலிருந்து இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகள் (யுசிபிஎம்பி) மருத்துவ நிபுணர்களுக்கும், மருந்து தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான நெறிமுறை உறவுகளின் எல்லையை வரையறுக்க முயல்கிறது.

2015-ம் ஆண்டில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட யுசிபிஎம்பி விதிமுறைகளுக்கு மாற்றாக நடப்பு ஆண்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகள், நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே.பால் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த குழு கடந்த ஆண்டு டிசம்பரில், தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி... ஓபிஎஸ் உறுதியால் சின்னம் முடங்குமா?

பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!

சிஎஸ்கே அணிக்கு 'தல' தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?... செயல் அதிகாரி கொடுத்த ட்விஸ்ட்!

விடிய, விடிய பேச்சுவார்த்தை... பாஜக அணியில் டி.டி.வி. தினகரனுக்கு 4, ஓபிஎஸ்சுக்கு 2 தொகுதிகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in