அமெரிக்காவின் அதிர்ச்சி அறிவிப்பு... சானிடைசர்களால் பார்வை இழப்பு முதல் கோமா வரை பாதிப்பு நேரலாம்

சானிடைசர்
சானிடைசர்

கொரோனா காலத்தில் தவிர்க்க இயலாது நமது அன்றாடங்களில் இடம்பிடித்த சானிடைசர்களில் அபாயகரமானவற்றை ’கை கழுவ’ வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று, ஹேண்ட் சானிடைசர்கள் பயன்பாட்டின் அபாயங்களை உலகுக்கு எடுத்து சொல்லியிருக்கிறது.

குமட்டல், வாந்தி, தலைவலி, மங்கலான பார்வை ஆகியவற்றில் தொடங்கி உச்சமாக, கோமா, வலிப்புத்தாக்கம், நிரந்தர பார்வையிழப்பு, மத்திய நரம்பு மணடலம் முடக்கம் மற்றும் கடைசியாக மரண ஆபத்து... இவை அத்தனையும் குறிப்பிட்ட ரக ஹேண்ட் சானிடைசர்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது நேர வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆபத்து கண்டறியப்பட்ட சானிடைசர்கள்
ஆபத்து கண்டறியப்பட்ட சானிடைசர்கள்

கொரோனா காலத்தில், முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றோடு கைகளை அடிக்கடி கழுவுவதும் வலியுறுத்தப்பட்டது. சோப் போட்டு கழுவ வாய்ப்பில்லாதவர்களுக்கு என பிரத்தியேக ஹேண்ட் சானிடைசர்கள் கை கொடுத்தன. ஒரு நாளில் பல முறை இந்த ஹேண்ட் சானிடைசர்கள் கொண்டு தத்தம் கைகளை சுத்தம் செய்து கொண்டதாகவும், அதன் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதாகவும் மக்கள் திருப்தி அடைந்தனர்.

ஆனால் இந்த சானிடைசர்கள் மனிதர்களுக்கு சாதாரண உபத்திரவங்கள் முதல் உயிர் குடிக்கும் ஆபத்து வரை விளைவித்துள்ளன என அமெரிக்காவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தற்போது எச்சரித்து உள்ளனர். இதனையடுத்து சந்தையில் விற்பனையாகும் ஏராளமான கை சுத்திகரிப்பு மற்றும் கற்றாழை ஜெல்களை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சமீபத்தில் ’அரூபா அலோ ஹேண்ட் சானிடைசர் ஜெல் ஆல்கஹால் 80%’ மற்றும் ’அருபா அலோ அல்கோலடா ஜெல்’ ஆகிய தயாரிப்புகளை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது. திரும்பப்பெறப்பட்ட தயாரிப்புகளுடன் தொடர்புடைய பாதகமான நிகழ்வுகள் பற்றிய எந்த ஆதாரபூர்வ ரிப்போர்ட்டும் இல்லை என்றாலும், தற்செயலாக அவற்றை உணவில் கலந்ததில், அவற்றை உட்கொண்ட குழந்தைகள் அதிக ஆபத்துக்கு ஆளானார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் கண்டு சொல்லியுள்ளனர்.

சானிடைசர்
சானிடைசர்

இந்த இடத்தில், கொரோனா பொதுமுடக்க காலத்தில் மது கிடைக்காததில் அதிருப்தி அடைந்த குடிப்பிரியர்கள் சிலர் மெத்தனால் சானிடைசர்களை அருந்தியதில் உயிரிழந்த செய்திகளை நினைவுகூரலாம். "இந்த பொருட்களை தங்கள் கைகளில் பயன்படுத்தும் அனைத்து நபர்களும் ஆபத்தில் இருந்தாலும், இந்த தயாரிப்புகளை தற்செயலாக உட்கொள்ளும் இளம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மற்றும் எத்தனால் ஆல்கஹாலுக்கு மாற்றாக இந்த மெத்தனால் தயாரிப்புகளை அருந்திய பெரியவர்கள் நச்சுத்தன்மைக்கு ஆளாகி உள்ளார்கள்’ என்று அமெரிக்க அதிகாரிகள் ஆய்வின் அடிப்படையில் கண்டு சொல்கின்றனர்.

பாதிப்புக்குரிய தயாரிப்புகள் ’2021 மே மற்றும் 2023 அக்டோபருக்கு இடையில் விநியோகிக்கப்பட்டன என்றும் அவையும் இணையதளம் வழியாக மட்டுமே விற்கப்பட்டன’ என்றும் தெரிய வந்துள்ளது. இந்த தயாரிப்புகளை வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

"இந்த மருந்து தயாரிப்பை எடுத்துக்கொள்வது அல்லது பயன்படுத்துவது தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால், தங்கள் மருத்துவர் அல்லது சுகாதார வழங்குநரை உடனடியாக நுகர்வோர் தொடர்பு கொள்ள வேண்டும்" என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிரடியை அடுத்து பல்வேறு நாடுகளும் தங்களது ஹேண்ட் சானிடைசர் தயாரிப்புகளை ஆராய ஆரம்பித்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...   


சொந்தமாக கோயில் கட்டிய பிரபல நடிகர்கள்!

தாய் கண் முன் மகன் வெட்டிக் கொலை... திருவேற்காட்டில் பயங்கரம்!

தொட்ட இடமெல்லாம் கொட்டும் கோடிகள்... கோழித் தீவன நிறுவனத்தில் 3- வது நாளாக சோதனை!

உங்க அப்பாவி கணவரை ஏன் ஏமாற்றினீர்கள்... ரசிகரின் கேள்விக்கு நாசூக்காக பதில் சொன்ன சமந்தா!

ராகுல் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு... நடிகை ரம்யா ரோடு ஷோ: குமாரசாமிக்கு எதிராக களமாடும் காங்கிரஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in