கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள்... ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் அதிர்ச்சி ஸ்டேட்மென்ட்!

கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு மற்றும் ரத்த பிளேட்லெட் குறைவு பிரச்சனை ஏற்படலாம் என ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு உலக நாடுகளை கொரோனா நோய் தொற்று முடக்கிப் போட்டது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். இதிலிருந்து மீண்டு வர பெரும்பாலான நாடுகள் கையில் எடுத்த மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி. கொரோனா தடுப்பூசிகளின் காரணமாக, கொரோனா தொற்று ஏற்பட்டாலும், உயிரிழப்புகளை தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் புதிய கொரோனா தடுப்பூசிகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆஸ்ட்ராஜென்கா
ஆஸ்ட்ராஜென்கா

அந்த வகையில் இந்தியாவில், இங்கிலாந்து-ஸ்வீடன் நாட்டின் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் கோவிஷீல்டு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்தது. இதேபோல் பாரத் பயோடெக் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

துவக்கத்தில் அனைவருக்கும் இந்த மருந்துகள் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவிய நிலையில், மாநில அரசுகள் தனித்தனியாக இவற்றை கொள்முதல் செய்ய அனுமதி கோரின. ஆனால் , அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த மத்திய அரசு, பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவித்தது.

ஆஸ்ட்ராஜென்கா
ஆஸ்ட்ராஜென்கா

இதையடுத்து நாடு முழுவதும் பொதுமக்களுக்கு மூன்று டோஸ்கள் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதனிடையே பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகா மீது இங்கிலாந்து நாட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

ஏராளமான உயிரிழப்புகள் கோவிஷீல்டு தடுப்பூசி காரணமாக ஏற்பட்டிருப்பதாக 51-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்துள்ள ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் காரணமாக மிகச் சிலருக்கு அரிதான சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

அதன்படி திராம்போசைட்டோபேனியா சிண்ட்ரோம் வரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிடிஎஸ் என்று அழைக்கப்படும் இந்த பிரச்சினை காரணமாக, ரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்த பிளேட்லெட்டுகள் உற்பத்தி ஆகியவை ஏற்படலாம் எனவும் ஒல்லி இருக்கிறது ஆஸ்ட்ராஜெனிகா. இதனால் கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால் வீக்கம், மூச்சுத் திணறல் மற்றும் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. 2023-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் டிடிஎஸ் எனப்படும் இந்த பிரச்சினை குறித்து கவலை தெரிவித்து இருந்தது.

கொரோனா நோய்க்கு தடுப்பூசி எடுத்துக் கொண்ட பலருக்கும் இந்த பிரச்சினை ஏற்படுவதாக அந் நிறுவனம் தெரிவித்திருந்தது. சிகிச்சையின் போது இந்த பிரச்சினை காரணமாக உடல் ஒத்துழைக்க மறுப்பதால், உயிரிழப்புகள் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஈரோடு ஸ்டிராங் ரூமில் மீண்டும் பிரச்சினை... டிஜிட்டல் திரை கோளாறால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு

பகீர்... நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்: தமிழக மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கவிஞர் வைரமுத்து உயர்ந்ததற்கு நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம்... கங்கை அமரன் பதிலடி!

'விடுதலை2’ நடிகர்களுக்கு சம்பள பாக்கி; ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வாக்குவாதம்!

பகீர்... 'தலிபான் இந்தியா தலை ஜாக்கிரதை': வீட்டுச் சுவற்றில் எழுதிய கர்நாடகா போலீஸ்காரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in