திருவோணம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் முயற்சியில் வெற்றி; பொன்னான காலம்; பேரும்புகழும் கிடைக்கும்!

திருவோணம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் முயற்சியில் வெற்றி; பொன்னான காலம்; பேரும்புகழும் கிடைக்கும்!

திருவோணம் நட்சத்திர அன்பர்களே!

இந்த ஆண்டில் பிரச்சினைகளை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். மனதில் நிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றிபெறும். சந்தான பாக்கியம் கிடைப்பதற்கான உன்னதமான கால கட்டம் இது. திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும்.

குடும்பத்தில் மனைவி வழியில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகிவிடும். ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம். பிள்ளைகளால் பெருமை காணலாம்.

தொழில் உன்னத நிலையை அடையும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டம் இது. வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடந்தேறும். முதலீடுகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். உத்தியோகஸ்தர்களில், நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரணையாக இருப்பார்கள்.

பெண்கள் தங்களின் வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் நிலவி வந்த கருத்து வேறுபாடு மறைந்து உறவுகள் நல்ல முறையில் மேம்படும். உடல் நலம் சிறப்படையும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை.

கலைத்துறையினருக்குப் பொன்னான காலம் வந்துவிட்டது. சிறிது முயற்சி எடுத்தாலே வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டுகள் கிடைக்கும்.

அரசியல்துறையினர் அதிகமாக உழைத்து பாராட்டைப் பெறுவீர்கள். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகம் விலகும். உங்கள் வாழ்வில், உங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் மதிப்பு மிகுந்த ஒருவர் உங்களைச் சந்திக்க வருவார்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மாணவர்கள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெரிய வெற்றியைப் பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களின் பிரச்சினைகளை நீங்கள் தீர்த்து வைத்து பாராட்டைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று, கால பைரவரை வணங்கிவாருங்கள். எதிர்ப்புகளும் தொல்லைகளும் விலகும். எடுத்தகாரியத்தில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in