கேட்டை நட்சத்திர அன்பர்களே! 2023ல் திறமை வெளிப்படும்; குடும்பத்தில் பிரச்சினை; இடமாற்றம் உண்டு!

கேட்டை நட்சத்திர அன்பர்களே! 2023ல் திறமை வெளிப்படும்; குடும்பத்தில் பிரச்சினை; இடமாற்றம் உண்டு!

கேட்டை நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.

குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது பிரச்சினைகள் வந்து போகும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும்.

தொழிலதிபர்கள் சொந்தத் தொழில் புரிவோர் கூடுதல் கவனம் எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தைச் சந்திக்கலாம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெண்களுக்கு சுபச் செலவுகள் ஏற்படும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக்கொடுத்துப் போக வேண்டியிருக்கும். பொதுநல சேவை செய்ய ஆர்வம் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதனால் பொருளாதாரரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டுகள் கிடைக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பிறமொழி மற்றும் இனத்தவரின் ஆதரவு, ஒத்துழைப்பு உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.

அரசியல்வாதிகளுக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். நல்லோர் ஆதரவு கிடைக்கப் பெற்று நற் காரியங்களில் ஈடுபட்டு அதனால் சில காரியங்கள் வெற்றி அடையலாம். சக நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்லாமல் அனுசரணையாக இருப்பதும்தான் உங்களுடைய வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் அமையும்.

மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். கேட்பார் பேச்சைக் கேட்டு விளையாட்டுத் தனமாக இருத்தல் கூடாது.

பரிகாரம்: பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வாரை வணங்கி வாருங்கள். தடைகள் விலகும். நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன் - வெள்ளி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in