சனிப்பெயர்ச்சி: பரணி அன்பர்களே! அலைச்சல் இருக்கும்; பணவரவு உண்டு; விட்டுக்கொடுக்கவும்; செலவு உண்டு!

சனிப்பெயர்ச்சி: பரணி அன்பர்களே! அலைச்சல் இருக்கும்; பணவரவு உண்டு; விட்டுக்கொடுக்கவும்; செலவு உண்டு!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

பரணி:

சனி பகவான் உங்களின் இருபத்தி இரண்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய் - சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பின் வாழ்க்கை என்பது மிகச் சிறப்பாக இருக்கும்.

இந்த சனிப் பெயர்ச்சியில் எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். நட்சத்திர அதிபதி சுக்கிரன் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கைத் தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல காலமாக இது அமையும். வீண் செலவுகள் வரலாம். நல்லபெயர் கிடைக்கும்.

பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சினை தீர பாடுபடுவீர்கள். காரியத்தில் தடை, தாமதம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: தினமும் துர்கையை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். பொருளாதாரம் உயரும்.

72% நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in