ஸ்வாதி மாலிவாலுக்கு ஆதரவு கரம் நீட்டும் பிரியங்கா காந்தி... ஆம் ஆத்மி அதிர்ச்சி

 ஸ்வாதி மாலிவால்
ஸ்வாதி மாலிவால்

அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டில் ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில், காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி, ஸ்வாதிக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது ஆம் ஆத்மி கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி எடுத்திருக்கும் நிலைப்பாடு ஆம் ஆத்மி கட்சியினருக்கு எதிராக அமைந்துள்ளது. ஸ்வாதி மாலிவால் விவகாரத்தை கோடிட்டு காட்டிய பிரியங்கா காந்தி, ”எந்தவொரு கொடுமைக்கும் எதிராக காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு ஆதரவாகவே நிற்கும்” என்று இன்றைய தினம் அறிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி “எந்தவொரு பெண்ணுக்கும் எங்கும், ஏதேனும் கொடுமை நடந்தால், நாங்கள் அந்தப் பெண்ணுடன் நிற்போம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நான் எப்போதும் பெண்களுடன் நிற்பேன்” என்றவர், ”அடுத்தபடியாக, ஆம் ஆத்மி கட்சி தங்களுக்குள் இந்த பிரச்சினையை விவாதித்து முடிவெடுக்கும் எனவும் கருதுகிறேன்” எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, “ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவால் விஷயத்தில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் ஸ்வாதி மாலிவாலுக்கு சில விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. ஸ்வாதி மாலிவால் ஒரு வலிமையான பெண்மணி. அவராக முன்வந்து சட்டப் பாதையில் சென்று நீதிக்காக போராடுவார் என்று நான் நம்புகிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மலிவால்

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கையில், ’பாஜக அரசியல் விளையாட்டு போட்டுக்காட்டுவதாக’ குற்றம் சாட்டினார், மேலும் ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின் போது ஸ்வாதி மாலிவால் டெல்லி காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டதற்குப் பின்னாலும் பாஜக இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இவற்றினிடையே ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் ஸ்வாதி மாலிவாலுக்கு காங்கிரஸ் கட்சியும், பிரியங்கா காந்தியும் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது, ஆம் ஆத்மி கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in