இடுப்பு வலிக்கு பாட்டி வைத்தியமே போதுமானது! : அவ(ள்) நம்பிக்கைகள் - 9

இடுப்பு வலிக்கு பாட்டி வைத்தியமே போதுமானது! : அவ(ள்) நம்பிக்கைகள் - 9

நம்பிக்கை :

"இடுப்பு வலிக்கு பாட்டி வைத்தியமே போதுமானது..!"

உண்மை :

கர்ப்பகாலத்தில், மாதங்கள் கூடும்போது, முதுகு மற்றும் இடுப்பில் வலி ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

பெரிதாகும் வயிற்றுக்கும், விரிவடையும் தசைகளுக்கும், அதிகரிக்கும் எடைக்கும் ஈடுகொடுத்து, உடலின் சமநிலையைத் தக்கவைத்துக் கொள்ள முதுகெலும்பின் இயல்பான வளைவுகள் இன்னும் அதிகரிக்கின்றன. நெஞ்சுப் பகுதியில் சற்று பின்னோக்கியும், வயிற்றுப் பகுதியில் சற்று முன்னோக்கியும் நகர, அதற்குத் தகுந்தாற்போல இவ்வளைவுகளும் அதிகரிக்கின்றன.

இந்த மாற்றங்கள் இயற்கையாகவே நிகழ்கின்றன என்றாலும், இயல்பு மாறுவதால் பல கர்ப்பிணிப் பெண்களுக்கு இடுப்பு மற்றும் முதுகில் வலியும் ஏற்படத்தான் செய்கிறது.

கர்ப்பகாலத்தில், பெண்கள் அமரும் முறை, நிற்கும் நிலை ஆகியவற்றை கவனமாகக் கையாளுதல் மூலம் முதுகுவலியைத் தவிர்க்க முடியும்.

மேலும் சில எளிய பயிற்சிகளும், எண்ணெய் மசாஜ் மற்றும் ஒத்தடம் போன்ற பாட்டி வைத்தியங்களும் இடுப்பு வலியிலிருந்து உதவத்தான் செய்கின்றன.

என்றாலும், வலி தொடர்ச்சியாகவோ அல்லது அதிகரித்துக் கொண்டே இருக்கும்போது, பாட்டியை மறந்துவிட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Related Stories

No stories found.