உலகமெங்கும் ஆண் - பெண்களை ஏங்க வைத்த பெண் பாடி பில்டர்... 41 வயதில் மர்ம மரணம்!

ரேச்சல் சேஸ்
ரேச்சல் சேஸ்

தனது கட்டுக்கோப்பான தேகத்தாலும், அதற்கான பராமரிப்பு வழிமுறைகளாலும் உலகெங்கும் கவனம் ஈர்த்திருந்த ரேச்சல் சேஸ் மர்ம மரணம் அடைந்திருக்கிறார்.

பெண்ணின் அழகு என்பதில் ஆண்கள் மற்றும் பெண்களின் கோணங்களில் பார்வைகள் வேறுபட்டிருக்கலாம். ஆனால், உலகமெங்கும் ஆண்கள் மற்றும் பெண்களை தனது கட்டுக்கோப்பான தேகப் பொலிவாலும், அதற்கான உடற்பயிற்சி வழிமுறைகளாலும் கவன ஈர்த்தவர் ரேச்சல் சேஸ்.

ரேச்சல் சேஸ்
ரேச்சல் சேஸ்

ஆண்களுக்கு நிகராக ஜிம்மில் பழி கிடந்து உடலை செதுக்கி வைத்திருப்பார் ரேச்சல். அந்த வகையில், உடற்பயிற்சியில் நாட்டமுள்ள இளைஞர்களை ரேச்சல் சேஸ் அதிகம் கவர்ந்திருந்தார். 5 குழந்தைகளின் தாயாக 40 வயதை கடந்தபோதிலும், அதற்கான சுவடே இல்லாது உடலை உருக்கி கட்டுக்கோப்பாய் ரேச்சல் வைத்திருந்ததும், வயது பேதமின்றி பெண்கள் அனைவரையும் ஒரு சேர கவர்ந்திருந்தது. இப்படி ஆண்கள் பெண்கள் பேதமின்றி சமூக ஊடகங்களின் சர்வதேச நட்சத்திரமாக ரேச்சல் ஜொலித்தார்.

இந்த சமூக ஊடகங்களில் ரேச்சலுக்கு மில்லியன்களில் பின்தொடர்வோர் உண்டு. உடலோம்பல் மட்டுமன்றி உணவூட்டம், குழந்தை வளர்ப்பு, உறவின் படிநிலை பிரச்சினைகள் குறித்த தனது பதிவுகளாலும் ரேச்சல் புகழ்பெற்றிருந்தார். ரேச்சலின் கணவர் 8 ஆண்டுகள் முன்னரே பிரிந்து சென்று விட்டார். ஒற்றை பெற்றோராக 5 குழந்தைகளை போராடி வளர்த்த விதம் குறித்து அவர் பதிவிடும் படிப்பினைகளுக்கும் தனி ரசிகர்கள் உண்டு.

v
v

இந்த நிலையில் தனது 41வது வயதில் திடீரென ரேச்சல் சேஸ் இறந்ததாக தகவல் வெளியாகி இருப்பது, அவர் மீது அபிமான கொண்டோரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ரேச்சலின் மூத்த மகள் அனா சேஸ் சமூக ஊடகப் பதிவு வாயிலாக இதனை அறிவித்திருக்கிறார். ஆனால் ரேச்சல் மரணத்தின் பின்னணி குறித்த தகவல்களை அவரது மகள் தெரிவிக்கவில்லை.

தீவிர உடற்பயிற்சி காரணமாக இறந்தார் என்றும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கான டயட் கோளாறு காரணமாக உடல் நலிவுற்று இறந்தார் என்றும் பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன. ரேச்சல் தரப்பிலிருந்து எவரும் இவற்றை இன்னும் மறுக்கவோ, உடன்படவோ இல்லை. ரேச்சல் சேஸ் மர்ம மரணம் தொடர்பாக போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in